பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வள்ளுவர் இல்லம்

“ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு” என்பது ஏசுநாதரின் பொன்மொழி. ஆனால் மறு கன்னத்தைக் காட்டுவதென்றால் முதல் கன்னத்தில் அடித்த குற்றத்தை மறவாமல் நினைவில் வைத்துக் கொண்டிருந்ததாகத்தானே பொருள்படும்? அந்நினை வில்லையாயின் மறு கன்னத்தை எங்ஙனம் காட்ட முடியும் மேலும், மறுகன்னத்தைக் காண்பித்தால், அடிப்பவனுக்குக் கன்னத்தை மீண்டும் காட்டுபவன் மேல் மிகுதியாகச் சினம் முளக் கூடும். ஆதலின் அவ்விதம் மறுகன்னத்தைக் காட்டாமல், முதல் கன்னத்தில் அடித்த தாகவே உணராமல்-அஃதாவது அதைப் பற்றிய நினைவே இல்லாதவனாகக் காணப்பட்டு, அடித்தவன் முன்பு தனக்கோ அல்லது பிறர்க்கோ செய்துள்ள ஏதேனும் நன்மையொன்றினைக் குறிப்பிட்டு அவனைப் பாராட்டத் தொடங்கி விட்டால் அவன் வெட்கித் தலைகுனிவான்.

அஃதாவது, நமக்குப் பிறர் கொலை போன்ற எத்தகைய கொடிய துன்பம் இழைத்தாலும், உடனே முன்பு அவர் செய்துள்ள ஒரு நன்மையை நாம் நினைத்தோ மானால், அத்துன்பம் உடனே மறந்து போகும். போகவே, இருதிறத்தார்க்கிடையிலும் மறம் நீங்கி அறம் தவழும்.

‘நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல

தன்றே மறப்பது நன்று.’ ‘கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுகன் றுள்ளக் கெடும்.’ உலகில் ஒருவர் எத்தீமை செய்தாலும் ஓரளவு உருப் படலாம்; ஆனால் பிறர் செய்த நன்மையை மறந்து