பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 83

அவர்க்கே கேடு சூழ்ந்தால் உருப்படவே முடியாது. இந்தக் கருத்து புறநானூறு (செய்யுள் - 34) போன்ற பல தமிழ் இலக்கியங்களிலும் கையாளப்பட்டுள்ளது.

உலகில் ஒருவன் எத்தகைய தீமையைச் செய்தாலும், அதற்கேற்ற - குறிப்பிட்ட தண்டனையை மக்களாலோ அரசியலாராலோ பெறுகின்றான். இந்தத் தண்டனை அவனது குற்றத்திற்கு ஈடு செய்கிறது. தண்டனை முடிந்ததும், மீண்டும் மக்களின் ஒத்துழைப்பையும் - உதவியையும் ஒரளவு பெற முடியும். ஆனால், உதவி செய்தவர்களையே ஒழித்துக் கட்டிய - நன்றி கொன்ற கீழ்மகன், சிறைக்குச் சென்று தண்டனையை முடித்து வந்தாலும், மீண்டொரு முறை அவனுக்கு எவரேனும் ஒத் துழைப்பு தருவார்களா? அவனிடம் வாணிகம் செய்வார் களா? எள்ளத்தனைதான் அவனை நம்புவார்களா? நன்மை செய்தவர்க்கே தீமை செய்த கயவன் பிறரை என்ன செய் வானோ? என்று மக்கள் அவனை எண்ணினாலுமே அருவருக்க மாட்டார்களா? இத்தகைய சூழ்நிலைக் கிடையில் அவன் எங்ஙனம் உய்யமுடியும் சுருங்கச் சொல்லி விளங்கவைக்க வேண்டுமென்றால், நுனிக்கிளை யில் இருந்து கொண்டு, தன்னைத் தாங்கும் அடிக் கிளையை வெட்டுபவனுக்கு உய்வுண்டோ?

‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.’ எனவே, இல்லறத்தார்கள் எப்போதும் செய்ந்நன்றி மறத் தலாகாது.