பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. நடுவு நிலைமை

இல்லறத்தார்க்கு நடுவு நிலைமையும் வேண்டும். நடுவு நிலைமை என்றால், எல்லோர்க்கும் பொதுவாக நடக்கும் நேர்மை. நீதி வழங்கல், பொதுத்தொண்டு புரிதல் கடமையாற்றல், அறநெறி நிற்றல் முதலியவற்றில், நண்பர் பகைவர், உறவினர் - அயலார் என்பவருள் ஒருவர்க் கொருவிதமாயும், மற்றொருவர்க்கு மற்றொருவிதமாயும் (ஒரவஞ்சனை) இல்லாமல், எல்லோர்க்கும் பொதுவாக நடந்து கொள்ளவேண்டும்.

‘தகுதி என வொன்று நன்றே பகுதியால்

பாற்பட் டொழுகப் பெறின்.’

உலகில் மக்கள் இந்தியன் - அமெரிக்கன், வங்காளி - தமிழன் எனப் பல காரணங்களால் பிளவு பட்டிருக்கின்றனரன்றோ பிளவுபட்ட ஒவ்வொருவரும் பொதுச் செயல்களில் தத்தம் பிளவை மறந்து மனித நீதிக் கிணங்க நடுநின்று ஒத்து வாழ வேண்டும் என்னும் உயர்ந்த கருத்தை இக்குறளைக் கொண்டு உலகினர் உணரவேண்டும். ஈண்டு, தகுதி என்பது நேர்மையான நடுநிலையைக் குறிக்கின்றது.

நேர்மையுடையவனது செல்வம், அவனுக்கு வசதி செய்து தருவதோடு, அவனது பரம்பரையிலும் நிலைத்து நின்று அனைவர்க்கும் பயன்படும். நேர்மையுடையவனது செல்வ வளர்ச்சிக்கு, அவன் நேர்மை கருதிப் பிறரும்