உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


நாடு பற்றிய உள்ளம்

முதலில் வள்ளுவர் உள்ளம், ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறது என்பதைப் பார்ப்போம். "பசி. பிணி, பகை ஒழிந்த தாடுதான் நாடு" என்கிறார். எப்படி?

"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு"

என்று. இதில் உறு, ஓவா, செறு என்ற சொற்களின் பொருள்கள் சிறப்புடையன. சோறு வழங்கும் நாடு. சோம்பேறிக் கூட்டத்தையும் பிச்சைக்காரர்களின் கூட்டத்தையும் வளர்க்கும் நாடாகும். ஆயிரம் பேருக்கு ஒரு ஊரில் சோறு போட்டான் என்றால், ஆ! அவ்வளவு ஏழையா உங்கள் ஊரில் இருக்கிறார்கள்?' என்று கேட்கத் தோன்றும். "எங்கள் ஊரில் நூறு ஆஸ்பத்திரிகள் இருக்கின்றன என்று ஒருவர் சொன்னால், நாம் என்ன நினைக்க வேண்டியிருக்கிறது. அந்த ஊரில் நோயாளிகள் மிகுந்துவிட்டார்கள் என்பதுதான் பொருள். படை முதலிய தற்காப்புகள் மிக்க ஒரு நாடு பகைமை மிகுந்த நாடு என்றுதானே கருதப் பெறும். ஆகவேதான் வள்ளுவர் உள்ளம் பசி, பிணி, பகை ஒழிக்கும் நாட்டை 'நாடு' என்று கருதாமல், உழைப்பால் பசிவென்று, உடல் நலத்தால் பிணிவென்று, அன்பால் பகை வென்ற மக்களைக் கொண்டதே நாடு" என்று கருதுகிறது.

வள்ளுவர் எந்த நாட்டிற்கும் சென்றதாக வரலாறுகளில் காணப்படவில்லை. சில அண்டை நாடுகளையும்கூட அண்டியதாகத் தெரியவில்லை. பேரவைகளிற் சென்று பெருமுழக்கம் செய்ததாகவும் இல்லை. ஆனால் எல்லா நாடுகளையும் சுற்றி, எல்லாவற்றையும் கண்டறிந்தவர்