பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

போல, இச் சிறந்த கருத்தைக் கூறியிருக்கிறார். காரணம் அவ்வளவு பண்பட்டது அவருடைய உள்ளம்.

வார்ப்புரு:Arger

திருவள்ளுவரின் இல்வாழ்க்கை பற்றிய கதைகள் பல. மனைவி வாசுகி அம்மையார் தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது திருவள்ளுவர் கூப்பிட்டதாகவும், உடனே அவ்வம்மை கயிற்றைவிட்டுக் கணவனிடம் சென்றதாகவும், கயிறு அப்படியே நின்றதாகவும், கதைகள் கேள்விப் பட்டிருப்பீர்கள், அவை மெய்யோ பொய்யோ என்பதை நாம் இங்கு ஆராய வேண்டுவதில்லை. ஆனால் வள்ளுவர் இல்வாழ்க்கை நடத்தியவர் என்பது மட்டும் நன்கு தெரிகிறது.

"இல்லது என் இல்லவள் மாண்பானால்? உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை?"

என்பது ஒரு குறள்.

மாண்புடைய இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றுமில்லை; மாண்பற்றவளானால் உள்ளது ஒன்றுமில்லை - என்று கூறுகிறார் வள்ளுவர். நற்குண நற் செய்கையுடைய பெண்மணி உள்ள வீட்டில் இல்லாத பொருள் ஏது? - எல்லாம் இருப்பது போலவே தான், இல்லவள் மாண்பற்றவளானால் வீட்டில் சிறந்த பல பொருள்கள் நிறைந்திருந்தாலும் என்ன பயன்? ஒன்றுமில்லாதது போலதான். இது கவித்திறன் அல்ல! - பயனற்ற அடுக்குச் சொல் அல்ல முற்றிலும் உண்மைக் கூற்று. உதாரணமாக ஒரு பரம தரித்திரன் வீடு; இடிந்த சுவர்; சரிந்த கூரை; மண்சட்டி. ஆனால் அவன் அங்கு ஒரு நல்ல மனைவியுடன் வாழ்கிறான். மகிழ்வோடு சாப்பிடுகிறான். குறை ஒன்றுமில்லை, கவலை