பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

பிட்டுவிட மாட்டார்கள். உயிரைக் கொடுத்தேனும் ஒழுக்கத்தைக் காப்பாற்று” என்பது தமிழ் நாகரிகப் பண்பு. ஆகவே வள்ளுவர் உள்ளம், "ஒழுக்கத்தை உயிரினும் அதிகமாக ஓம்பு!" என்று கூறுகிறது.

அன்பு உள்ளம்

“மன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை".

இக்குறளிலே வள்ளுவர் “உன் உயிரே போவதாயிருப் யினும் நீ மற்றொரு உயிரைக் சொல்லாதே” என்று கூறுகிறார். ஒரு உயிரைக் கொன்றுவிடுவதால் நம் உயிர் பிழைக்கும் என்பது கிடையாது. எடுத்துக்காட்டாக, பல வைத்தியர்கள் பச்சை வாதத்திற்குப் புறாரத்தம், கறி இவற்றைச் சாப்பிடச் சொல்லுவார்கள். தினசரி ஒரு புறா சாப்பிடுவார் நோயாளி. ஆனால் வாதம் நிற்பதில்லை. ஒரு ஆளுக்கு 730 புறா அறுத்துக் கொடுத்தும் ஆள் பிழைக்கவில்லையே என்று நினைக்கிறார்களா? அதுவும் இல்லை. பின்னும் அதே யோசனையைச் சொல்வது தவறான வழக்கமாக இருந்து வருகிறது. பாவம் புறாக்கள் மடிந்துகொண்டே இருககின்றன. பிள்ளைகள் பிழைப்பதாகத் தெரியவில்லையே! இதை நினைக்கிறது. வள்ளுவரின் அருள் உள்ளம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் என் இளமையிலே எழுந்த சொற்றொடர் ஒன்று இப்போது நினைவிற்கு வருகிறது. அது தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத மனிதர்கள், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத விலங்குகளை, தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத விக்கிரங்களுக்குப் பலியிடுகிறார்கள் என்பதுதான். இன்றும் பலர் கோவிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு, ஆடு