பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

கொடுக்கிறார். வள்ளுவரது பிச்சைக்கார உள்ளத்தின் வேதனையைப் பாருங்கள்.

விருந்துள்ளம்

விருந்தினரை எப்படி உபசரிப்பது என்று விளக்குகிறார் வள்ளுவர்.

"மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து."

குறளே ஏழு சீர்களால் ஆயது. இதில் மூன்று நான்கு சீர்கள் உவமை. என்ன அழகு பாருங்கள். அனிச்சம் பூ என்பது ஒரு மெல்லிய பூ, அது எவ்வளவு மெல்லியது தெரியுமா? அந்தப் பூவை மோந்து பார்த்தாலே வாடி விடுமாம். அவ்வளவு மெல்லியது அனிச்சம் பூ. ஆனால் விருந்தினர் உள்ளம் அவ்வனிச்சம் பூவைவிட மென்மையானது. முகந்திரிந்து பார்த்தாலே வாடிவிடும் என்று கூறுகின்றார் வள்ளுவர். ஆகவே, இன்முகத்தோடு, சற்றும் மனத்தில் அழுக்கில்லாமல், வந்த விருந்தினரை மகிழ்வோடு ஏற்று உபசரிக்க வேண்டுமென்கிறார். எத்தகைய உயர்ந்த நோக்கம்! பண்டைத் தமிழரின் விருந்தோம்பல் குணத்திற்கு இதைவிடச் சிறந்த சான்று வேறு வேண்டுவதில்லை. 'இந்தச் சமயத்தில் வந்தானே விருந்தாளி' என்று நினைத்தாலே விருந்தினர் முகம் வாடிப் போய்விடுமாம். வள்ளுவரின் உள்ளம் இதை அனுபவிக்காமலேயே எவ்வளவு அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது பாருங்கள்.

வேடன் உள்ளம்

வள்ளுவர் வேட்டையாடக் காட்டுக்குப் புறப்படுகிறார். சாதாரணமாக வேடர்கள் வேட்டையாடுவதைப்