பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

பார்த்தார். இவரும் ஒரு அசல் வேடனாக மாறிவிட்டார்.

"கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது"

என்பது ஒரு குறள். அதாவது, ஒரு அம்பு வில்லுடன் முயல் வாழும் காட்டிற்குச் சென்று குறி பார்த்து எய்து, முயலையும் கொன்று வேட்டையாடி வெற்றி பெற்று வீடு திரும்புகிறான். இவனைப் பார்க்கிறது வள்ளுவவர் உள்ளம். இவ்வெற்றியைச் சிறப்பு எனக் கொள்ளவேயில்லை. மற்றொரு வேடன் வேல் ஏந்தி, யானை வாழும் காட்டிற்குச் சென்று யானையைக் கண்டு குறி பார்த்து எய்து, குறியும் தவறி, யானையும் பிழைத்துக் போய், வேலையும் இழந்து, வெறுங்கையோடு வீடு திரும்புகிறான். இவனையும் பார்க்கிறார் வள்ளுவர். அவருடைய உள்ளம் இதுவே சிறப்பு எனக் கருதுகிறது. தோல்வியடைந்த வேடனை, 'நன்று செய்தாய்' என்று உயர்த்திக் கூறுகின்றார் . காரணம்? இவன் யானை வேட்டைக்குச் சென்றான் : தோற்றான். அவனோ அற்ப முயல் வேட்டைக்குச் சென்றான்; வெற்றி பெற்றான். பயன் என்ன?’ என்கின்ற உள்ளுவதெல்லாம் உயர்ந்ததாக இருக்கட்டும் என்னும் வள்ளுவர் உள்ளம், வேறு எவ்வாறு கருதும்? சிறிய காரியங்களில் முயன்று வெற்றி பெறுவதைவிட, பெரிய காரியங்களில் முயன்று தோல்வியடைவது சிறப்பு என்பது வள்ளுவரின் உள்ளக் கருத்தாகும்.

உண்மையுள்ளம்

வள்ளுவர், பொய் நிறைந்த உள்ளத்தைப் பார்த்து ஒரே இருட்டாக இருக்கிறது என்கிறார். அந்த இருட்டைப் போக்க ஒரு விளக்குத் தேவை என்கிறார். இப்பொழுதுள்ள குத்துவிளக்கோ, மின்சார விளக்கோ