பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

என்பது கருத்து. வேறு ஒப்புவமை சொல்லத்தக்க பொருள் இல்லாத காரணத்தால், மக்களே போல்வர் கயவர் என்றார். மக்களாய்ப் பிறப்பினும் மக்கள் தன்மையின்றேல், மக்களல்ல என்பது வள்ளுவர் கருத்து. இவற்றால், திருவள்ளுவரது நுண்ணிய ஆராய்ச்சித்திறன் நமக்கு நன்கு விளங்குகிறது.

ஆண்மை உள்ளம்

வீரஞ்செறிந்த ஆண்மையாளன் ஒருவன், தன் சென்ற நாட்களை எண்ணினால், அவற்றுள் பகையரசனுடைய படையை எதிர்த்துப் போர்செய்து, முகத்தினும் மார்பினும் புண்படாத நாட்களையெல்லாம், பயன்படாது கழிந்த வீணான நாட்களாகக் கருதி வருந்துவானாம். இதை,

"விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள்
வைக்குங் தன்னாளை யெடுத்து"

என்று கூறுகின்றார் வள்ளுவர். இக்குறளில் வள்ளுவரின் ஆண்மையையும், தமிழரின் வீரத்தையும் காணும் பொழுது, நம் உள்ளத்திலும் ஒரு வீரத்துடிப்பு துடிக்கிறது. என்னே பழந்தமிழ் மக்களின் வீரம்!

பெண்மை உள்ளம்

பெண்மை உள்ளத்தை மக்கள் உள்ளத்திற்குமேல் அடுக்குங்கள். பெண்ணுள்ளத்தை நம் கண்முன் ஓவியமாகத் தீட்டிக் காட்டியுள்ளார் வள்ளுவர்.

தலைமகளிடமிருந்து பிரிந்திருந்த தலைமகன், தலைமகள் தன்(பக்கம் வரவும், 'நின்னைப் பிரிந்த காலத்து இடையீடின்றி நினைத்தேன்' என்னும் கருத்துப்பட, உள்ளி

வ,-3