பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

கூறினார். வள்ளுவர் பதினோராவதாக உறக்கமும் பறந்து போய்விடும் என்று கூறுகிறார். விறகு எரிக்கும் நெருப்பினுள்ளே ஒருவன் உறங்கினாலும் உறங்கலாம், பசி எரிக்கும் நெருப்பினுள்ளே எவனும் உறங்கமுடியாது என முடிவுகட்டிக் கூறிவிட்டார்.

பசி வந்த மக்கள் அதைப் போக்குவதற்கு வேறு வழியின்றி இரக்க எண்ணுந் துன்பம், இரப்பதற்குச் செல்வர்களை நோக்கிச் செல்லும் துன்பம், அவர்களை காத்திருந்து காணுந் துன்பம், கண்டு கெஞ்சிக் கேட்குந் துன்பம், கேட்டதும் அவர் இல்லை என்பாரோ என்று எண்ணுந் துன்பம். கொடுப்பதாயினும் அதை அவரது வேலையாட்களிடமிருந்து கைதாழப் பெறுந் துன்பம், பெற்றதை உண்ணும்பொழுது தம் இழிநிலையை எண்ணுந் துன்பம், இவற்றை எண்ணி எண்ணி இரவில் உறங்க முடியாமற் துடிக்குந் துன்பம், அதனால் விளையும் உடல் நலக் கேட்டின் துன்பம், ஆகிய பல்வேறு துன்பங்களையும் "கொன்றது போலும் நிரப்பு" தன்னுள் நிரப்பியே காட்டுகிறது.

"ஈயாமை, துவ்வாமை ஆகிய இல்லாமை இரண்டும் ஒருருவாகி ஒருவனைப் பற்றி, அவனை உண்ண முடியாமலும், வழங்க முடியாமலும் வாழச்செய்கின்ற வாழ்வு என்ன வாழ்வு? அவ்விதம் ஒருவனை வாழவைப்பதைவிடக் கொன்று மடிந்துவிடுவது நல்லது. இந்நிரப்பு அதையும் செய்யாமல நாள்தோறும் கொல்வது போலும் கொடுமைகளை நிரப்பிக்கொண்டே வருகிறது" என, இக்குறள் கூறுவது நம்மையும் கலங்கவைத்து விடுகிறது.

நாள்தோறும் கொல்லாமற் கொல்லுகின்ற இத்தகைய வறுமையானது இன்றும் வருமோ? என்றெண்ணி ஒருவன் அஞ்சி நடுங்குகின்ற நடுக்கமானது