பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

யும் விட்டு விட்டார்கள். அவர்களுக்கு நள்ளிரவில் 12 மணி அடித்த பிறகே நாள் தொடங்குகிறது. ஆனால் இவர்களல்லாத பழந்தமிழர்களுககு உச்சிப் பொழுதிலிருந்து நாள் தொடங்கும். உச்சிக்கு அச்சமில்லை உச்சிக்கு நாள் இல்லை, நட்சத்திரம் இல்லை. தேதி இல்லை, கிழமையில்லை. சுத்தமான வெள்ளையுள்ளம் படைத்த களங்கமற்ற நேரம் அல்லவா?

மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத புதுப் பொருள்கள் விளையவும், மகிழ்ச்சிக்குரிய புதுமலர்கள் பூக்கவும், மக்களைத் துன்பத்தினினறும் நீக்கவும், சூரியன் தென்திசையினின்றும் வடதிசை நோக்கி திரும்பத் தொடங்குகின்ற இந்நாள்-முதல்நாள்-நன்னாள்- திருநாள் எனக் கருதப்பெற்று வருகிறது.

தமிழர் திருநாளை ஓர் வெற்றித் திருநாள் எனலாம். ஏன் இது வெற்றித் திருநாளாகக் கருதப்படுகிறது? புதிய நெல் விளைந்து அரிசியாகிவிட்டது. கரும்பைச் சாறாக்கிச் சர்க்கரை காய்ச்சியாய்விட்டது. இரண்டையும் சேர்த்துப் பொங்கிச் சாப்பிடுகிறோம். உழைப்பின் முழுப்பயனை இன்று பெறுகிறோம். மஞ்சளும், இஞ்சியும், வானுயர் கரும்பும் எல்லாம் விளையும் காலம் வீதி புதிதாகிறது. ஆளும் புதியவனாக மாறுகிறான். எங்கும் புதிய நெல், புதிய பானை, புதிய உடை, புதிய மலர். புதிய வளை, புதிய இல்லம் காணப்படுகின்றது. இதைப் பார்த்துத் தமிழ்மக்கள் இந்நாளை இயற்கையோடு இயங்கும் திருநாளாகக் கருதி, திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாளாகவும் எண்ணிக் கொண்டாடுகிறார்கள். நாமும் இந்நாளை இன்று சாதி, மத அரசியல் கட்சி வேறுபாடுகளினறிக் கூடிக் கொண்டாடுகின்றோம். இதில் எவ்வளவு மகிழ்ச்சியிருக்கிறது!