பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவப் பெருந்தகையார் திருக்குறளை அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளார். இம்மூன்றனுள் அறத்தினை இல்லறம், துறவறம் என இரண்டாகப் பகுத்துள்ளார். வள்ளுவனார் இல்லறத்தை இருபது அதிகாரங்களுள் விளக்கியுள்ளார். இவ்விருபதனுள் மிகவும் இன்றியமையாத ","வாழ்க்கைத் துணைநலம்"," முதல்மூன்று அதிகாரங்களை மட்டும் ஈண்டு எடுத்துக்கொள்ளலாம். "இல்வாழ்க்கை மக்கட்பேறு" என்னும் இல்லறமாகிய மனையறத்தைப் பற்றியும் அம்மனையறத்து உறுப்பினர்களைப் பற்றியும் வள்ளுவர் கூறியாங்கு விளக்கிச் செல்லுதலின், இவ்வெளியீட்டிற்கு "வள்ளுவர் கண்ட மனையறம்" என்னும் பெயர் வழங்கப்பெற்றது. இந்நூலில், அதிகாரப் பெயர் விளக்கமும், குறளும், பதவுரையும், பழம்பெரும் புலவராம் மணக்குடவர் உரையும், பரிமேலழகர் உரையும் நூலாசிரியரின் (சுந்தர சண்முகனாரின்) தெளிவுரையும், ஆராய்ச்சி உரையும், அதிகாரக் கருத்துச் சுருக்கமும் முறையே அமையும். அவை வருடிாறு: இல்லறம் இல்லறம் என்றால் மனையறம். இல் என்றால் மனை அல்லது ്. வீட்டிற்குரிய காரணத்தாலேயே, மனைவிக்கு இல், இல்லாள், இற்கிழத்தி என்னும் பெயர்கள் எழுந்தன. எனவே, இல்லறம் என்றால், வீட்டில் மனைவி மக்கள் முதலியோர் சூழ இருந்து, அறநெறிதவறாமல் குடும்பம் நடாத்தும் வாழ்க்கை ஒழுங்கு என்பது பெறப்படும். இல்லற இயல் என்றால், அவ்வில்லறத்தின் இலக்கணங்களை அஃதாவது இல்லறத்தில் இருப்பவர்கள் இயற்றவேண்டிய கடமைகளைக் கூறும் பகுதி என்பது பொருள். முதற்கண்"இல்வாழ்க்கை" என்னும் அதிகாரம் வருமாறு : 2 பேரா. சுந்தர சண்முகனார்