பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு நிலை உண்டு. (இவ்விரண்டினை மட்டுமே திருவள்ளுவர் தம் நூலுள் விவரித்துள்ளார்.) . அவையாவன :- ஒன்று, குறிப்பிட்ட காலம்வரையும் மனைவியுடன் கூடிச்சிற்றின்பம் நுகர்ந்து, உலகிற்குத் தொண்டாற்றும் உயர்ந்த இல்லற நிலை; மற்றொன்று, சிற்றின்பம் வெறுத்தபின், பேரின்பத்தில் விருப்புடையவராகிப் பிற உயிர்களிடம் பேரிரக்கம் பூண்டொழுகும் துறவறநிலை. இவ்விருநிலைகளையே இல்லறஇயல், துறவறவியல் என இயம்பலானார் வள்ளுவனாரும். எனவே, தமிழர்தம் கோட்பாட்டுக்கும் திருவள்ளுவர் கருத்துக்கும் மாறாக, இக்குறளுக்கு உரையெழுதுதல் ஒரு சிறிதும் ஒவ்வாது என உணர்க. ஆகவே, இக்குறளில் உள்ள "மூவர்" என்னும் சொல்லுக்குப் பிரமசாரி, வானப்பிரத்தன், சந்நியாசி எனப் பொருள் உரைக்காமல், பெற்றோர், பெண்டாட்டி, பிள்ளை எனப்பொருள் உரைத்தாம் யாம். பிறர் கூறும் வானப்பிரத்தனையும், சந்நியாசியையும், நம் வள்ளுவர். துறவி என ஒன்றாக அடக்கி, அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதை, "துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும்" என்னும் அடுத்த குறளில் கூறியுள்ளார். பிரமசாரியாய் இருந்து வறுமையுற்று வாடும் பிறருடைய பிள்ளைகளைத் "துவவாதவர்க்கும்" என்பதனுள் அடக்கிவிடலாம். ஆகவே, அடுத்த குறளையும் ஆராயின் அறிய ഖരൂഥേ உண்மை! சிலர் திருமணம் ஆனதும் மனைவியின் வயப்பட்டுப் பெற்றோரைப் போதிய அளவு காப்பாற்றுவதில்லை. "தாய் தண்ணிர் இன்றித்தவிக்கின்றாள். தம்பி கும்பகோணத்தில் கோதானம் கொடுத்துக் கூத்தடிக்கின்றானாம்" என்னும் பழமொழி எழுந்ததும் இது குறித்தே. இன்னோரைத்திருத்துவதற்காகவே, "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்", "தந்தை தாய்ப் பேண்" முதலிய பொன்மொழிகள் எழுந்தன. சிலர் குடித்தும், சூதாடியும், வைப்பாட்டியின் வயப்பட்டும் பெண்டாட்டி, பிள்ளைகளைக் காப்பாற்றாமல் அடித்துத் துரத்தி அல்லல் அடையச் செய்கின்றனர். எனவே, இல்வாழ்வார் எவரும் இனியும் இத்தகைய 6 பேரா. சுந்தர சண்முகனார்