பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீய செயல்களுக்கு இடம்இல்லாமல், இம்முத்திறத்தாரையும் உணவு. உடை முதலியவற்றால் ஒழுங்காகக் காப்பாற்ற வேண்டும் என்று இக்குறளால் தெரிவித்துள்ளார் திருவள்ளுவர். இக்குறளுக்கு இவ்விதம் உரை செய்யாவிட்டால், மேற்கூறிய சில கருத்துக்களையெல்லாம் கூறாதுவிட்ட குறைபாடு ஆசிரியரை அடையும் அன்றோ? ஆய்க அறிஞர்! 2. துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. (பதவுரை) இல்வாழ்வான் என்பான் - இல்லறத்தான் என்று சொல்லப்படுபவன், துறந்தார்க்கும் - (பற்றுக்களைத்) துறந்த பெரியாருக்கும், துவவாதவர்க்கும் - (ஏழ்மையால்) எவ்வித இன்பத்தையும் அநுபவிக்க முடியாத ஏழை எளியவருக்கும், இறந்தார்க்கும் - (ஆதரவின்றித் தம் பார்வையில்) இறந்து கிடப்போருக்கும் (அஃதாவது அனாதைப் பிணங்களுக்கும்) துணை - (தக்க) துணையாவான். இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : (மன-உரை) வருணத்தினையும், நாமத்தினையும் துறந்தார்க்கும், துறவாது நல்குரவாளராய் உண்ணப் பெறாதார்க்கும், பிறராய் வந்து செத்தார்க்கும் இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன் துணையாவான். (பரி-உரை) களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும், நல்கூர்ந்தார்க்கும், ஒருவரும் இன்றித் தன்பால் வந்து இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான் துணை. (தெளிவுரை) து என்றால் அநுபவித்தல், துவ்வாதவர் என்றால் அநுபவிக்காதவர் - அஃதாவது, இன்பம் அநுபவிக்க முடியாத ஏழை எளியவர்கள். இல்வாழ்வான். துறவிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும் உணவு, உடை முதலியன உதவ வேண்டும்; வள்ளுவர் கண்ட மனையறம் 7