பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதரவற்ற (அனாதைப்) பிணங்களை அப்புறப்படுத்தி இறுதிக்கடன் இயற்ற வேண்டும் என்பது கருத்து. ஆதரவில்லாப் பிணங்களை அப்புறப்படுத்துவது அறங்களுள் ஒன்றாக அக்காலத்தில் கருதப்பட்டது. (ஆராய்ச்சி உரை) உரையாசிரியர்கள் பலரும், முன் குறளில் சொல்லப்பட்டுள்ள மூவருள் துறந்தாரையும் ஒருவராகச் சேர்த்துவிட்டார்கள் ஆதலின், இக்குறளில் உள்ள "துறந்தார்க்கும்" என்ற சொல்லைக் கண்டு திகைத்து, வேறு என்னென்ன பொருள்களையோ விளம்பி இடர்ப்படுகின்றனர். மணக்குடவர், முன் குறளில் உள்ள மூவருள் ஒருவராகிய துறவி, வருணத்தினையும், நாமத்தினையும் (சாதி சமயங்களை) துறவாதவர் என்றும், இக்குறளில் உள்ள துறவி, வருணத்தினையும் நாமத்தினையும் துறந்தவர் என்றும் வேற்றுமை காட்டிச்சரிசெய்யப் பார்க்கின்றார். துறவிகளுக்குள்ளேயே, வருண நாமங்களைத் துறந்தவர் என்றும், துறவாதவர் என்றும் இருவகை உண்டா? இல்லையே! வருண நாமங்களைத் துறவாதவர்களை எப்படித் துறவிகள் என்னும் பெயரால் அழைக்கமுடியும்? வருண நாமங்களையே துறவாதவர்கள் வேறு எவற்றைத்தாம் துறக்க உடன்படுவார்கள்? நிற்க பரிமேலழகரும், முன் குறளிலேயே துறந்தாரைக் கூறிவிட்டாராதலின், இக்குறளில் உள்ள துறந்தார் என்பதற்கும் துறவி எனப் பொருள்கூற உடன்பட்டிலர். ஆனால், இவரும் வேறுவிதமாகச் சரிசெய்யப்பாடுபட்டுள்ளார். அஃதாவது- துறந்தார் என்றால், இவ்வளவு நாள் காப்பாற்றி வந்தவர்களால் கைவிடப்பட்டவர்கள் (துறக்கப்பட்டவர்ககள்) என்று கூறியுள்ளார். இங்ங்ணம் துரத்தப்பட்டு இன்பம் அநுபவிக்க முடியாமல் தவிப்பவர்களைத் "துவ்வாதவர்" என்பதற்குள் அடக்கிவிடலாமே! மற்றும், துறந்தார் என்னும் செய்வினையை, துறக்கப்பட்டார் எனச் செயப்பாட்டு வினையாக வலிந்துகொண்டு இடர்ப்படவும் வேண்டியதில்லையே! எனவே, ஈண்டு, துறந்தார் என்பதற்குப் பற்றுக்களைத் துறந்த பெரியோர்கள் என்று பொருள் கொள்வதே சாலப்பொருந்தும். அச்சொல்லுக்குரிய இயற்கைப் 8 பேரா. சுந்தர சண்முகனார்