பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறந்துபோனவர்களை ஒம்புதல் என்றால் என்ன? தாய்தந்தையரோ, புலவர்களோ, துறவிகளோ, வள்ளல்களோ இறந்துவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் உயிர் தென்புலத்தில் இருந்தால்தான் நமக்கென்ன? இல்லாவிட்டால்தான் நமக்கென்ன? அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்ததற்கு அறிகுறியாக - அவர்கள் இவ்வுலகிற்குத் தொண்டாற்றியதற்கு அடையாளமாக - அவர்களைப் போலவே ஏனையோரும் நல்வழியில் நடக்கவேண்டும் என்பதை நினைவுபடுத்தும் நெறியாக - அவர்களால் நன்மைபெற்ற நாம், அவர்கட்கு நன்றி செலுத்தும் வாயிலாக - அவர்கட்கு நினைவுநாள் கொண்டாடவேண்டும். இப்போதும் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடுகின்றோம் அல்லவா? இறந்துபோன தாய்தந்தையரை ஆண்டுதோறும் எண்ணிநன்றிபாராட்டுபவராகநடந்துகொள்கின்றோம் அல்லவா? இவைபோல்வனவற்றையே தென்புலத்தாரை ஓம்பல் எனத் தெரிவித்துள்ளார் திருவள்ளுவர். . . தெய்வத்தை ஒம்புதல் என்றால், ஓய்வும் உறுதியும் பெறுவதற்காகக் கடவுளை வழிபடுதல். விருந்து என்பதற்கு நேர்பொருள் புதுமை, "விருந்தே புதுமை" என்பது தொல்காப்பிய மூலம். வெள்ளை கறக்கிறது என்றால் வெள்ளையான பசு கறக்கிறது என்று பொருள்கொள்வதைப்போல, விருந்து வந்தது என்றால் புதிதான மனிதர் வந்தார் என்று பொருள் கொள்ளவேண்டும். இதற்குத்தான் ஆகுபெயர் என்று பெயர். ஆகுபெயர் என்றால் ஒன்றைக் குறிக்கும் ஒரு பெயர். அதனோடு தொடர்புடைய மற்றொன்றுக்கு ஆகிவருவது. புதுமையைக் குறிக்கும் விருந்து என்னும் பெயர், புதிதாய் வருகின்ற மனிதர்க்கு ஆகிவருவதால் இஃது ஆகுபெயராகும். இதன் வகைகள் பல. ஈண்டு விரிப்பின் பெருகும். எனவே, முன்பின் வந்துகொண்டிருக்கும் தொடர்புடைய உறவினர்கள் விருந்தினர் ஆகமாட்டார் என்பதும், திடீரெனப் புதிதாக வருபவரே விருந்தினர் ஆவர் என்பதும் வெட்ட வெளிச்சம். திருக்குறள் விருந்தோம்பல் என்னும் பகுதியிலுள்ள "வருவிருந்து வைகலும் 1 O பேரா. சுந்தர சண்முகனார்