பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருமா? ஆனால், நல்ல வழியில் பொருள் ஈட்டி வாழ்வதோ, ஊற்றுநீரை நம்பி வாழ்வது போலாகும். ஊற்று எப்போதும் சுரக்குமன்றோ? எனவே, நல்வழியில் பொருளீட்டி, நாலாபேர்க்கும் உதவி வாழ்வானுடைய குடும்பம் தொடர்ந்து விளக்கம் பெறும் என்னும் இக்குறட் கருத்து இப்போது ஏற்புடையதாய்த் தோன்றுமே! (ஆராய்ச்சி உரை) சிலர் இன்னொருவருடைய பொருளை எடுத்துத் தம்முடையது போல வழங்குவார்கள். கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையார்க்கு உடைப்பது என்றால் இதுதான்? இன்னும் சிலர், பிறரை வருத்திப் படாதபாடு படுத்தி அவரிடம் உள்ள பொருளைப் பறித்து, நல்லவர்போலத் தாங்கள் வழங்குவார்கள். "மாட்டைக் கொன்று செருப்புத்தானம் செய்வது" என்றால் இதுவேதான். இவ்விதம் பழிப்புக்கிடமான முறையில் பொருள் தேடிச் செய்பவை யெல்லாம் உண்மையான உதவியாகா. ஆனால், பிறருடைய பொருளைக் கையாண்டு பலர்க்கும் பயன்படவும் செய்யலாம். அப்படிச் செய்யும்போது, பொருளுக்கு உரியவரின் வாழ்க்கைக்கு ஒரு தீங்கும் ஏற்படாதபடிப் பார்த்துக் கொள்ள வேண்டும். அஃதாவது, அன்னாரின் தேவைக்கு மேற்பட்ட பகுதியையே பலர்க்கும் பயன்படுத்த வேண்டும். அதனால் தப்பில்லை. ஒரு பொய் ஒருவர்க்கும் தீமை செய்யாமல், பலர்க்கு நன்மை செய்யுமேயானால் அப்பொய்யும் மெய்யேயாம் என்னும் கருத்தில், "பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த - நன்மை பயக்கும் எனின்" என்று ஒரு குறள் பின்னோரிடத்தில் உளதன்றோ? 5. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. (பதவுரை) இல்வாழ்க்கை - (ஒருவனுடைய) இல்லற வாழ்க்கையானது, அன்பும் - (யாவரிடத்தும்) அன்பினையும். அறமும் - அறச்செயலினையும், உடைத்தாயின் - உடையதாய் இருக்குமே யானால், பண்பும் - (அவ்வில்வாழ்க்கையின்) இலக்கணமும், பயனும் வள்ளுவர் கண்ட மனையறம் 17