பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"போ" என்பதில் உள்ள ப்+ஓ) உயிர் எழுத்தின் அளவை மிகுதியாக எடுத்து ஒலிப்பதற்கு அறிகுறியாக"ஒ" என்பது சேர்க்கப்பட்டது. ஆதலின், இதனை இலக்கணத்தில் "உயிர்அளபெடை' என்பர். இங்கே இந்த உயிர் அளபெடை இடம் அடைப்பதற்காகக் கையாளப்பட்டது - என்பது இலக்கண நூலாரின் கருத்து. இதை நான் ஒத்துக் கொள்வதில்லை. இடம் அடைப்பதற்கு வள்ளுவர்க்கு வேறு சொல் கிடைக்காதா? எனவே, ஒரு பொருள் கருதியே வள்ளுவர் இங்ங்ணம் அமைத்துள்ளார். அதாவது, அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றாதவர்களை நோக்கி, நீங்கள் புறத்தாற்றில் "போஒய்" கிழிப்பது என்ன? என்று நீட்டி நெளித்து இளித்துக் காட்டி ஏளனம் செய்கிறார். இந்த ஒ என்னும் ஓர் எழுத்தை இடையில் புகுத்தி அளவை மிகுதியாக எடுத்ததில் இத்துணைப் பொருட்சுவை பொதிந்து கிடப்பதை நுனித்துணர்ந்து மகிழ்க. 7. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாந் தலை (பதவுரை) இயல்பினான் - இயல்பான ஒழுக்கமுறையுடன், இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் - குடும்ப வாழ்க்கை நடத்துபவன் என்று புகழ்ந்து பேசப்படுபவன், முயல்வாருள் எல்லாம் தலை - (வேறு நன்மை பெற முயல்பவர்களுக்குள் எல்லாம் முதன்மையானவன் ஆவான், (இயல்பினான் என்பதின் இறுதியிலுள்ள "ஆன்" மூன்றாம் வேற்றுமை உருபு.) இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : (மன உரை) நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவ னென்பான், முயல்வா ரெல்லாரினுந் தலையாவான். முயறல் - பொருட்கு முயறல். (பரி உரை) இல்வாழ்க்கையினின்று அதற்குரிய இயல்போடு கூடி வாழ்பவனென்று சொல்லப்படுவான், புலன்களைவிட முயல்வா ரெல்லாருள்ளும் மிக்கவன். வள்ளுவர் கண்ட மனையறம் 2 3