பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்வாழ்க்கையே நோற்பாரின் நோன்மையுடைத்து" என்பதும் ஈண்டு நினைவிருக்க வேண்டும். எனவே, இல்லறத் தவத்துக்குரிய இலக்கணம், அனைவர்க்கும் ஆகவேண்டிய உதவிகளைச் செய்து அவரவரையும் நல்ல வழியில் நடத்துதல், தானும் நல்ல வழியில் நடத்தல் என்னும் இரண்டும் உடைமை எனத் துணிக முன்பு - சங்க காலத்தில் பிசிராந்தையார் என்னும் புலவர் பெருமான் ஒருவர் வாழ்ந்தார். அவர் வயதால் முதிர்ந்தவர் வடிவத்தால் இளையவர். நரை, திரை, மூப்புக்களுக்கு அவர் உடம்பில் எங்கும் இடம் கிடைக்கவில்லை. ஒரு சமயம் வெளியூர் ஒன்றுக்குச் சென்றார் ඡීමl6ධlff. அவ்வூரினர் சிலர் புலவரை நோக்கி, பெரியீர்! தங்கட்கு வயது பல நிரம்பியும் நரை தோன்றவில்லையே! காரணம் என்ன? இவ்வாற்றலை (வித்தையை) எங்கு, எவரிடம் கற்றீர்? என்று வினவினார்கள். அவர்க்குப் பின்வருமாறு பதிலீந்தார் புலவர். . "அன்பர்களே பல ஆண்டு ஆகியும் நரை தோன்றாத ஆற்றலை எங்குக் கற்றீர்" என்று வியப்புடன் வினவுகின்றீர்கள். இங்கு வியப்பிற்கே இடமில்லையே. யான் ஒழுங்கான இல்வாழ்க்கை உடையவன். அதனால் என் மனைவியும், மக்களும் திருந்திய நல்வாழ்க்கையினர். வேலைக்காரரும் அத்தகையோரே பற்றுக்களைத் துறந்த சான்றோர் பலர் எம் ஊரில் உள்ளனர். இத்தகைய சுற்றுச் சூழலுடன் நல்லமுறையில் யாங்கள் வாழ்க்கை நடத்துவதால், பசி, பிணியின்றி என்றும் இளையனாய்த் திகழ்கின்றேன் யான்" என்று மொழிந்தார். இதனை அப்புலவர் பாடிய "யாண்டு பல ஆக நரையில ஆகுதல் யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின், மாண்ட என் மக்களொடு மனைவியும் நிரம்பினர், யான் கண்டனையர்என் இளையரும், வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே" 28 பேரா. சுந்தர சண்முகனார்