பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைசியாகத் தேறுவது மனைவி என்னும் ஒரு பொருள்தான். அவன் வாழ்வு அவள் வாழ்வு - அவன் தாழ்வு அவள் தாழ்வு. இன்ப துன்பம் இரண்டிலும் இறுதிவரையும் இணைந்து நிற்பவள் அவளே! நான் இவ்வளவு எழுதியதைக் கொண்டு என்னைப் பெரிய பெண்டாட்டிதாசன் என்று எவரும் எண்ணிவிட வேண்டா! இதனை நானாகச் சொல்லவில்லை. வள்ளுவர் சொல்லியிருக்கிறார் வாழ்க்கைத்துணை என்று "இங்கே வள்ளுவர் அளவுமீறிப் புனைந்துரைத்து விட்டார். ஒருவேளை அவர் மனைவியார் அவ்வாறு நடந்திருக்கலாமோ, என்னவோ? சில பெண்டிரால், அவர்தம் கணவரது வாழ்க்கை பெரிதும் இடர்ப்படுகின்றதே - வாழ்க்கைக்கே இறுதி நேர்ந்து விடுகின்றதே! அவர் தமை வாழ்க்கைத்துணை எனல் வள்ளுவர்க்கு அடுக்குமா? என ஐயுறலாம் சிலர். வள்ளுவர் என்ன கொக்கா? அவர் அவ்வளவு தெரியாதவரா? ஆழம் தெரியாமல் காலைவிட்டு அகப்பட்டுக்கொண்டு திணறுபவர் அல்லர் அவர். அதனால்தான், எல்லா மனைவியரும் வாழ்க்கைத் துணைகளாகி விடமுடியாது; மனைத்தக்க மாண்புடை யளாகித் தற்கொண்டான் வளத்தக்காளே வாழ்க்கைத் துணையாவாள் என்றார் வள்ளுவப் பெருந்தகையார். 'மனைத்தக்க மாண்பு என்பது என்ன? முறை தெரியாத பெண்ணொருத்தியை நோக்கி, குடித்தனம் செய்கின்ற பெண்ணா காரணமா தெரியவில்லையே என்று உலகியலில் பேசுவது வழக்கம். எனவே, குடும்பப்பெண் என்றால், அவளிடம் என்னென்னவோ நற்குண நற்செய்கைகளை மன்பதை (சமூகம்) எதிர்பார்க்கிறது, என்பது புலனாகும். நல்ல பெண்மணி என்னும் தலைப்பில் இப்போது நாட்டில் ஒரு பாட்டுப் பாடுகின்றார்களே, அதன்படி ஒழுகினாலேயே கூட ஏறக்குறைய மனைத்தக்க மாண்புதான். அடுத்து "தற்கொண்டான் வளத்தக்காள்" என்றால் என்ன? கணவனும் மனைவியுமாக வெளியூரில் தனிக்குடும்பம் செய்கின்றனர் என வைத்துக்கொள்வோம். அங்கு மாமி இல்லை. மைத்துணி இல்லை; வள்ளுவர் கண்ட மனையறம் 37