பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம். (பரி உரை) மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவனில்லாளிடத்தில்லையாயின் அவ்வில் வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமை யுடைத்தாயினும் அஃதுடைத்தன்று. தெளிவுரை) மனைவியிடம் குடும்பப் பண்புகள் - சிறப்புகள் இல்லையாயின் வேறு எது நிறைந்திருப்பினும் வாழ்க்கை சிறவாது. (ஆராய்ச்சி உரை) மனைமாட்சி மனைவிக்கு இருக்கத்தானே வேண்டும். அதனால்தானே அவளுக்கு மனைவி என்னும் பெயரும் கொடுக்கப்பட்டது. மனைக்கு உரியவள் மனைவி. வள்ளுவரோ 'இல்லாள் என்று அழைக்கிறார். இல் என்றால் வீடு. இல்லுக்குரியவள் - வீட்டுக்குரியவள் இல்லாள். இந்தச் சொல்லோடு தொடர்புடைய நயமான செய்தியொன்று நினைவிற்கு வருகிறது. தமிழினம் மனைவிக்குக் கொடுத்திருக்கும் மதிப்புக்கு, மனைவி, இல்லாள் என்னும் சொற்களே சான்று பகருமே! மேலும், ஆடவர் தம் மனைவியரை "எங்கள் வீட்டிலே" என்னுஞ் சொல்லால் குறிப்பிடுவது மரபு. ஆண்மகன் தான் சிறுவனாய் இருக்கிறபோது எங்கள் வீட்டிலே கேட்டார்கள் எனத் தன் பெற்றோரை "வீட்டிலே" என்னுஞ் சொல்லால் குறிப்பிடுகிறான் - அவனே தனக்குத் திருமணமாகிவிட்ட பின்பு, தன் பெற்றோர் இருக்கும்போதே, "எங்கள் வீட்டிலே கேட்டார்கள்" எனத்தன் மனைவியை "வீட்டிலே" என்னும் சொல்லால் குறிப்பிடுகிறான். என்ன விந்தை இது ஒருவர் தம் நண்பரிடம் "எங்கள் வீட்டிலே வாங்கிவரச் சொன்னார்கள்" என்பார். வீட்டிலே என்றால் உன் தந்தையார் வாங்கிவரச் சொன்னார் போலும் என்பார் நண்பர். இல்லையையா, எங்கள் வீட்டிலே என்கிறேன்.- நீ என்னவோ தந்தையாரா என்று கேட்கிறாயே என்பார் இவர். உடனே நண்பர், ஒகோ! உன் தாயார் வாங்கிவரச் சொன்னாரா? சரிதான், அப்படிச் சொல்லு என்பார். அதற்கு இவர், இல்லையையா இல்லை, எங்கள் வீட்டிலே வீட்டிலே என்று அத்துக் கொள்கிறேன். மறுபடியும் தாயாரா என்று கேட்கிறாயே, வீட்டிலே என்றால் வேறு யாரையா? என் 40 பேரா. சுந்தர சண்முகனார்