பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோதுகிறது. பணங்காசோமிகுதி. இன்னும் எல்லாம் இருக்கின் ஆனால் ஒரே ஒரு குறை. அதுதான் மாட்சிமையுடைய மை கிடைக்காத குறை. அது இல்லாமல் வேறு எது இருந்துதான் என்ன பயன்? அவளை விரட்ட முடியாது. அன்றைக்கு ஆயிரம் பேருக்கு முன்னாலே தாலி கட்டினாயே - அவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு வா! எனக்கு ஆக வேண்டியதைத் தீர்த்துவிடு என்று மிரட்டுவாள். எனவே, இவன்தான் கூறாமல் "சந்நியாசம்" கொள்ளவேண்டும். இவ்வாறு கொள்ளலாமா? இதுவா இல்வாழ்க்கைக்கு அழகு? இதனால்தான், "வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்" என்றார் வள்ளுவனார். கணவனோ பட்டம் பல பெற்றவன்; பதவிமேல் பதவி > 60T6). . இங்கே வள்ளுவர்க்கு ஒன்றும் ஓடவில்லை - ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம் - உணர்ச்சி வயப்பட்டுவிட்டார். பிற மாட்சிகளினும், மேலானதாக மனைமாட்சியைச் சிறப்பிக்கவந்த ஆசிரியர், இந்த மாட்சி இருந்தாலும் போதாது, அந்த மாட்சி இருந்தாலும் போதாது என்று எவையேனும் சில மாட்சிகளையாயினும் குறிப்பிட்டிருக்க வேண்டுமல்லவா? எதைக் குறிப்பிட்டாலும் ஈடாகாதுபோல் தெரிகிறது. எனவே, போங்களையா, அது எந்த மாட்சியாயிருந்தாலும் முடியாது என்னும் கருத்தில், "எனைமாட்சித்தாயினும்" என்று சொல்லிவிட்டார். மனைமாட்சி இல்லாவிடின், வாழ்க்கை இனிக்காது - சிறக்காது என்று சொல்லி யிருக்கலாமே எனின், வாழ்க்கை இருந்தல்லவா அதன்பிறகு இனிப்பது - சிறப்பது? வாழ்க்கையே இல்லை போங்களையா என்று சொல்பவர்போல் எனைமாட்சித்தாயினும்"இல்" என்று ஒரே அடியாய் அடித்துவிட்டார். எனவே, மனைக்கு வாய்த்துள்ள மங்கையர்களே! என்ன செய்ய இருக்கின்றீர்கள்? 3. இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை. . (பதவுரை) இல்லவள் மாண்பானால் = மனைவி 42 பேரா. சுந்தர சண்முகனார்