பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளவில் மழை பெய்யவே பெய்யாது. இஃது உறுதி உறுதி!! ஆயின் திருவள்ளுவர் இங்ங்னம் தெரிவித்திருப்பதின் நோக்கம் என்னவென்பதை ஆராயவேண்டும். ஒழுங்காகக் குடும்பம் நடாத்தும் பெண், முன்னிய காரியத்தை முட்டின்றி முடிப்பாள் என்பதே இக்குறளில் குறிப்பாகக் கொள்ளவேண்டிய கருத்தாகும். இங்குத் திருவள்ளுவர் எடுத்துக்கொண்ட பொருளைச் சிறப்பிக்க வேண்டும் என்று கருதிக் கற்பனையையே கையாண்டுள்ளார். இது ஒருவகையான கவிமரபு. இன்னோரன்ன கவிமரபுகளைக் குற்றம் உடையதாகத் தள்ளமுடியாது. வள்ளுவர் ஓரிடத்தில், துன்பத்திற்குக் கலங்காதவர் துன்பத்திற்கே துன்பம் கொடுப்பர் என்னும் கருத்திலும், துன்பம் துன்பப்படும் என்னும் கருத்திலும் "இடும்பைக்கு இடும்பை படுப்பர்" "இடுக்கண் இடுக்கண் படும்" என்று கூறியுள்ளார். உண்மையில் துன்பம் ஓர் உயிருள்ள பொருளா? அத்துன்பத்திற்கு ஒருவர் துன்பம் கொடுப்பது என்பதும், அத்துன்பம் துன்பப்படும் என்பதும் முயற்கொம்பும், குதிரைக் கொம்பும் அல்லவா? இதன் உண்மைக்கருத்து என்ன? துன்பத்திற்காக மனம் சோராமல் இருந்தால் அத்துன்பம் துன்பமாகத் தோன்றி வருத்தாது நீங்கும் என்பதே. மற்றோரிடத்தில், பிறந்த குடிக்குப் பெருமை தருவேன் என்று முயலும் ஒருவனுக்கு, கூடத் தெய்வமும் தன் இடுப்பு உடையை இறுக்கிக் கட்டிக்கொண்டு வந்து உதவி செய்யும் என்னும் கருத்தில், "குடி செய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும" என்றியம்பியுள்ளார் வள்ளுவர். உண்மையில் தெய்வம் இடுப்பு உடையை இறுக்கிக் கட்டாவிட்டால், உடை அவிழ்ந்து விழுந்துவிடுமா? எனவே, இன்னோரன்னவை யெல்லாம், எடுத்துக் 48 பேரா. சுந்தர சண்முகனார்