பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- தன்னை மனைவியாகக் கொண்ட கணவனையும், பேணி - நன்கு (உபசரித்து) காப்பாற்றி, தகைசான்ற (தமக்கிருக்கின்ற) தகுதி நிறைந்த, சொல்-புகழ் மொழியை, காத்து - (நீங்காது) காப்பாற்றி, சோர்வு இலாள் - (எந்தக் காரியத்திலும்) சோர்வு கொள்ளாதவளே, பெண் - சிறந்த பெண்ணாவாள். இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : (மண-உரை) தன்னையும் காத்து, தன் கணவனையும் பேணி, நன்மை யணிந்த புகழ்களையும் படைத்துச் சோர்வின்மை உடையவளே பெண்ணென்று சொல்லப்படுவள். (பரி-உரை) கற்பினின்றும் வழுவாமல் தன்னைக் காத்துத் தன்னைக்கொண்டவனையும் உண்டிமுதலியவற்றால் பேணி, இருவர் மாட்டும் நன்மை யமைந்த புகழ் நீங்காமல் காத்து, மேற்சொல்லிய நற்குணநற்செய்கைகளினும் கடைப்பிடி உடையாளே பெண்ணாவாள். (தெளிவுரை) தன்னையும் வழுவாது காத்துத் தன் கணவனையும் அன்புடன் போற்றித் தகுதிமிக்க புகழை நிலைநிறுத்தித் தளர்ச்சி கொள்ளாதவளே சிறந்த குடும்பப்பெண். (ஆராய்ச்சி உரை) பெண், தன்னையும் கணவனையும், குடும்பப் பெருமையினையும் காப்பாற்றிச் சோராதிருக்க வேண்டும். முன் அதிகாரத்தில் இயல்புடைய மூவர்க்கும் என்ற இடத்தில், பெற்றோர், மனைவி, மக்கள் என உரை எழுதினோம். பின்னர், "தென்புலத்தார்" என்னும் குறளில், தான் என்பதற்குக் கணவனைக் (குடும்பத் தலைவனை) குறித்தோம். கணவன் தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும் என்றால் மனைவியும் அடங்கிவிடவில்லையா? மனைவியைக் காக்கவேண்டும் என்று தனியாக வேறு கூறவேண்டுமா? என்று சிலர் எம்மை வினவினர். இக்குறளைக் கூர்ந்து நோக்கவேண்டுகிறோம். தன்னைக் காப்பதோடு கணவனையும் காப்பது மனைவியின் கடமை என்று இங்கே கூறும்போது, தன்னைக் 50 பேரா. சுந்தர சண்முகனார்