பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பதோடு மனைவியையும் காப்பது கணவனின் கடமை என்று அங்கே கூறியதில் என்ன பிழை? 7. சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. (பதவுரை) சிறை-(வீடு, அறை முதலியன) சிறைகளைக் கொண்டு, காக்கும்-(பெண்களைக்) காவல் காக்கின்ற, காப்பு-காவல், எவன் செய்யும்- என்ன பலனைத் தரும்? (ஒன்றும் தராது; ஆதலின்) மகளிர் - பெண்கள், நிறை - தம் கற்புநிறைவால், காக்கும் - (தம்மைத் தாமே) காத்துக் கொள்ளும், காப்பே-காவலே, தலை - தலைசிறந்த காவலாகும். இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : (மன-உரை) மகளிரைச் சிறை செய்து காக்கும் காவல் யாதினைச் செய்யும்? அவரது கற்புக் காக்கும் காவலே தலையான காவல். (பரி-உரை) மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல். (தெளிவுரை) தூங்குபவனை எழுப்ப முடியும்: விழித்திருப்பவனை எழுப்ப முடியாது; அதுபோல, தன் ஒழுக்கத்தில் தனக்கே கவலையுள்ள பெண்ணையே பிறரால் காக்கமுடியும். அல்லாத பெண்ணை அறையில் இட்டுப் பூட்டினும் காக்கமுடியாது. ஆண், பெண் இருபாலார்க்கும் அறிவுரை வழங்குவதே இக்குறள். பெண்களைப் பூட்டிவைக்கும் பேதையர்களே! அவர்கட்கு விடுதலை நல்குங்கள் எங்கிருப்பினும், எங்குச் செல்லினும் நல்லோர் நல்லோரே! அல்லோர் அல்லோரே! என்று ஆண்கட்கும், அரிவைமார்களே! ஆண்களால் உங்களை அடக்கமுடியாது. நீவிரே வள்ளுவர் கண்ட மனையறம் 5 1