பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூம்மை நேரிதின் நடத்திக்கொள்ள வேண்டும் என்று பெண்கட்கும் தெளிவுறுத்துகின்றார் தெய்வப் புலவர். 8. பெற்றான் பெறின்பெறுவர்பெண்டிர்பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. (பதவுரை) பெண்டிர்-பெண்கள், பெற்றான்-தம்மை உள்ளன்போடு. ஏற்று (பெற்று) வாழும் கணவரை, பெறின் உ ள்ளன்போடு கணவராக ஏற்று வாழ்வார்களேயானால், புத்தேளிர் வாழும்-தேவர்கள் வாழ்கின்ற, உலகு-வானுலகின்கண், பெரும் சிறப்பு-மிகப் பெரும் சிறப்புக்களை, பெறுவர்-அடைவார்கள். இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : . . (மண-உரை) பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின், தேவர் வாழும் பெரிய சிறப்பினைடைய உலகத்தைப் பெறுவர். (பரி-உரை) பெண்டிர்தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவாராயின், புத்தேளிர் வாழும் உலகின்கண் அவரால் பெருஞ் சிறப்பினைப் பெறுவர். - (தெளிவுரை) மகளிர் தன் கணவரின் நல்லன்பையும் நன்மதிப்பையும் பெறும்படி நடந்துகொள்ளின், தேவர் வாழும் விண்ணுலகில் பெரும்பேறு பெறுவர். எடுத்துக்காட்டு வேண்டுமானால் கண்ணகி சாலும். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் பெறுதல் என்றால், இரண்டறக் கலந்து இயைந்து வாழ்தல். "பெற்றார்ப் பெறின்" என்று பாடங்கொண்டார் மணக்குடவர். 9. புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. (பதவுரை) புகழ்-புகழ்ச்சியான செயலை, புரிந்த-விரும்பிய, இல்-மனைவி, இலோர்க்கு-இல்லாத ஆடவர்க்கு, இகழ்வார்முன் 52 பேரா. சுந்தர சண்முகனார்