பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- (தம்மை) இகழ்ந்து பேசும் எதிரிகளின் முன்னே. ஏறுபோல்ஆண்சிங்கத்தைப் போல (இறுமாப்புடன் நடக்கக்கூடிய) பீடு நடை - பெருமிதமான நடை, இல்லை-இல்லையாம். இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : (மன-உரை) புகழ் பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம், தம்மை இகழ்ந்துரைப்பார் முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை. (பா'-உரை) புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு, தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர் முன் சிங்கஏறுபோல் நடக்கும் பெருமித நடை இல்லை. (தெளிவுரை) புகழுக்குரிய மனைவி கிடைக்கப்பெறாதவன் பிறர்முன் தலைநிமிர்ந்து நடக்க முடியாது; எல்லோராலும் இகழவும் படுவான். "நம்மிடம் ஐயா காட்டும் ஆர்ப்பாட்டம் எல்லாம், அடுப்பங்கரையில் அம்மாவிடம் சென்றால் அடங்கிவிடும்" என்று பெண்டாட்டி யடியவர்களை நோக்கி உலகினர் எள்ளி நகையாடும் இகழ்ச்சியினையே, இக்குறளுள் நுணுக்கமாக நுழைத்துள்ளார் நுண்மாண் புலவர். 10. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. (பதவுரை) மங்கலம்-(வீட்டிற்கு) மங்கலப் பொருளாவது, மனைமாட்சி - மனைவியினுடைய மாட்சிமையே; மற்று-பின்பு, அதன்-அந்த மனைமாட்சியினுடைய, நன்கலம்-நல்ல அணிகலமாவது, நன்மக்கள் - நல்ல பிள்ளைகளை, பேறு-பெறும் பேறே யாகும்; என்ப-என்று சொல்லுவர் அறிவுடையோர். இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : வள்ளுவர் கண்ட மனையறம் 53