பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(மனஉரை) ஒருவனுக்கு அழகென்று சொல்லுபமனையாள் ஒழுக்கம் உடையாளாதலை அவ்வழகின்மேல் நல்ல அணிகலன் என்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறதலை. (பரி-உரை) ஒருவருக்கு நன்மை யென்று சொல்லுவர் அறிந்தோர் மனையாளது நற்குண நற்செய்கைகளை; அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை. (தெளிவுரை) வீட்டிற்கு விளக்கம் பெண்கள்; பெண்கட்கு விளக்கம் நல்ல பிள்ளைகள் என்பது கருத்து. இங்கு, "மனைக்கு விளக்கம் மடவார், மடவார் தமக்குத் தகைசால் புதல்வர்" என்னும் நான்மணிக்கடிகைச் செய்யுள் ஒப்பு நோக்குதற்குரியது. (இக்குறளின் விளக்கமே, எம்மால் எழுதப்பெற்றுள்ள "வீடும் விளக்கும்" என்னும் தனித்தமிழ் நூல்) அதிகாரச் சுருக்கம் பெண்கள், இல்லறத்திற்கு வேண்டிய மாண்பும், வரவுக்கேற்ற செலவும், கணவனைத் தெய்வமாகக் கொள்ளும் கற்பும், சோர்வின்மையும், தம்மைத்தாமே காக்கும் நிறையும் உடையவர்களாக இருக்கவேண்டும். இத்தகைய பெண்கள் இருக்கும் வீட்டில் எல்லாம் இருக்கும். அவரினும் சிறந்த பொருள் உலகில் ஒன்றும் இல்லை. அவர் நினைத்த காரியத்தை முடிப்பர். வானுலகிலும் சிறப்புப் பெறுவர். கணவர்க்கும் அவரால் பெருமிதம் கிடைக்கும். இறுதியாக, பெண்கட்கு விளக்கம் பிள்ளைகள் எனக்கூறி, மக்கட்பேறு என்னும் அடுத்த அதிகாரத்திற்கு அடிப்படையிட்டுளார் அறிஞர் வள்ளுவனார். © «» «» •,• •z• •z• 54 பேரா. சுந்தர சண்முகனார்