பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டும்? அதிலும் பொதுமறையாகியதிருக்குறளிலா புகலவேண்டும்? அல்லது. இக்காலத்துப் போர்களினால் மனிதப்பஞ்சம் ஏற்பட்டதனால், மிகுதியாகப் பிள்ளை பெறுபவர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என்று விளம்பரம் செய்து தூண்டும் சில நாடுகளுக்கு ஏற்பட்ட நிலை, நம் நாட்டிற்கும் வள்ளுவர் காலத்தில் ஏற்பட்டதா? என்றெல்லாம் வேடிக்கையான மனக்கிளர்ச்சிகள் விளையலாம் சிலர்க்கு. பூணுல் பூண்டவர்கள் (இருபிறப்பாளர்) தென்புலத்தார் கடனைக் கழிப்பதற்காகப் பிள்ளை பெற்றே தீரவேண்டும் என்று பதமாகப் பகர்ந்துள்ளார் பரிமேலழகனார். அப்படியானால் மற்றவர் பிள்ளைபெற வேண்டியதில்லை போலும் நாம் தென்புலத்தார் கடனைக் கழிக்கவேண்டும்; மோட்சத்திற்குச் செல்லவேண்டும் என்ற கருத்தைத்தான் காதலர் கண்கள் ஒன்றுக்கொன்று அறிவித்துக் கொள்ளுகின்றன போலும் ஆண்-பெண்களின் கூட்டுறவின்போது அந்நோக்கந்தான் முதலிடம் பெறுகின்றது போலும் விசுவாமித்திர முனிவர் முதல் வீரப்பன் வரையும், அகலிகை முதல் ஆண்டிச்சிவரையும் சிற்றின்பத்தில் ஈடுபட்டதற்குரிய காரணம் என்னவென்பது எவர்க்கும் தெரியாதுபோலும்! இன்ப உலகின் இயல்புகளை எடுத்தோதி, அவற்றுள் சீர்திருத்தம் காண்பிப்பதே. பண்டைய செந்தமிழ் இலக்கியங்களின் சிறப்பியல்பாகும். இத்தகையதே திருக்குறளின் மக்கட்பேறும். வாழ்க்கையில் எவ்வளவு இன்பம் இருப்பினும் குழந்தை யில்லாவிட்டால் என்ன பயன்? தமக்குப்பின் குடும்பத்தின் நிலை என்ன? கொழுகொம்பில்லாத கொடிபோல் குன்றுமே வளர்ச்சி உலகில் எப்பொருள் தோன்றினாலும் பிள்ளைப்பேறு இல்லாவிடின் உலகந்தான் நடைபெறுவது யாங்ங்னம்? எனவே, மணம் செய்துகொள்ளாமல் உண்மைத்துறவு கொண்டோர் சிலரும், துறவு, கைம்மை என்னும் திரை மறைவில் ஒளிந்து வாழ்ந்து கருவைச் சிதைப்போர் சிலரும், மணந்து கொண்டும் பிள்ளை பெறாதவர் சிலரும், பிள்ளை பெற்றும், தம்முடைய 58 பேரா. சுந்தர சண்முகனார்