பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்கக்குறைவாலும், வளர்த்து முன்னுக்குக் கொண்டுவரும் திறமை இல்லாததாலும் பிள்ளைகளைப் பயனற்றவராக்கித் தாமும் பயன்பெறாது போகின்ற சிலரும் உலகில் உள்ளனர். ஆதலால், அவர்களை நோக்கி, மனிதர்களே! அறிவு நிரம்பிய நன்மக்களைப் பெற்று, பயன்பெற்று உலக வளர்ச்சிக்கும் உதவுதலே சால அழகிதாம் என்று கூறியுள்ளார் திருவள்ளுவனார். மேலும், நிலநீர், வீடுவாசல், நகைநட்டு முதலியவற்றைப் பெறுவதைப் பேறு என்னாமல், பிள்ளைபெறுவதையே "பேறு" (பெறுதல்) என்னும் சொல்லால் குறிக்கின்றனர் தமிழ் மக்களும். எடுத்துக்காட்டு வேண்டுமானால், "என் மகள் கருவுற்றிருக்கின்றாள். பிள்ளைப்பேறு பார்ப்பதற்குப் பணம் வேண்டும்" என்றும், "தாய் மகளுக்குப் பிள்ளைபேறு பார்ப்பதற்காக வந்திருக்கிறாள்" என்றும் வழங்கும் உலக வழக்குக்களே போதுமே! இவ்வுலக வழக்குக்களும், இம்முதற் குறளும் ஒன்றுக்கொன்று உறுதுணையன்றோ? அறிவற்ற பயனற்ற பிள்ளைகளைப் பெறுவதைவிட பெறாமலே இருப்பதும், மரக்கட்டையைப் பெறுவதும், பொம்மைகளை வைத்துக்கொண்டு கொஞ்சுவதும் நல்லது ஏன்? பெருந்துன்பமும், பொருட்செலவும் குறையும் அன்றோ, இக்கருத்தை அடக்கி அறிவறிந்த மக்கள் என்று பாடியுள்ள நயம் நன்று நன்று! 2. எழுபிறப்பும் தீயவை திண்டா பழியிறங்காப் பண்புடை மக்கட் பெறின். (பதவுரை) பழி பிறங்கா - பழிக்கு இடம் இல்லாத, பண்புடை - நல்ல குணங்களையுடைய, மக்கள் - பிள்ளைகளை, பெறின் - பெற்றால், (பெற்றோர்க்கு) எழுபிறப்பும் - ஏழு பிறப்புக்களிலும் கூட, தீயவை - தீய தீமைகள், தீண்டா - சேராவாம். இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : (மன-உரை எழு பிறப்பினும் துன்பங்கள் சாரா ஒரு வள்ளுவர் கண்ட மனையறம் 59