பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பிலே பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின். (பா'-உரை) வினைவயத்தால் பிறர்க்கும் பிறப்பு ஏழின் கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா, பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களையுடைய புதல்வரைப் பெறுவானாயின். (தெளிவுரை) பிள்ளைகள் கெட்டவராய் இருந்தால், பெற்றோர்களுக்கும் கெட்ட பெயரும், கெடுதியும் நேரிடுகின்றன. பிள்ளைகள் நல்லவராயிருந்தால், பெற்றோர்களுக்கும் நல்ல பெயரும், நன்மைகளும் ஏற்படுகின்றன. நன்மை ஒரு வேளை மட்டுமா? ஒரு நாளைக்கு மட்டுமா? இல்லை, எப்பொழுதும், எந்நாளும் நன்மையே! என்பதை வற்புறுத்துவதற்காகவே "எழு பிறப்பும் தீயவை தீண்டா" என்று திருவாய் மலர்ந்தார் திருவள்ளுவனார். 3. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும். (பதவுரை)தம் பொருள் - (பெற்றோர்களாகிய) தம்முடைய செல்வம், தம் மக்கள் - தம்முடைய பிள்ளைகளே, என்ப- என்று சொல்லுவர் அறிஞர். அவர் பொருள் - அப்பிள்ளைகளுடைய செல்வம், தம்தம் வினையால் - (பெற்றோர்களாகிய) தங்கள் தங்களுடைய தொழிலினால், வரும் உண்டாகும். இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர். உரையும் வருமாறு : (மன உரை) தம்முடைய பொருள் என்று சொல்லுவர் உலகத்தார் தம் மக்களை அம்மக்களுடைய பொருள் தம் தம்முடைய வினையோடே கூட வருதலான். (பரி-உரை) தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர் அறிந்தோர்; அப்புதல்வர் செய்த பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே தம்பால் வரும் ஆதலான். 60 பேரா. சுந்தர சண்முகனார்