பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(தெளிவுரை) பெற்றோர்களுடைய செல்வம் பிள்ளைகளே. பெற்றோர் தொழில்செய்து ஈட்டும் செல்வம் பிள்ளைகளுடையதாம். பெற்றோர்கள் தாம் தொழில் செய்து ஈட்டும் செல்வத்தைத் தம் பிள்ளைகளுடையதாகவும், தம் பிள்ளைகளைத் தம்முடைய செல்வமாகவும் கருதுவது என்றும் இயற்கைதானே இவ்வுலகில்! (ஆராய்ச்சி உரை) தம்தம் வினையால் என்பதற்கு, தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே என்று பகர்ந்துள்ளார் பரிமேலழகனார். அஃதாவது, பெற்றோரை நோக்கிப் பிள்ளைகள் செய்யும் நல்வினையால் பிள்ளைகளின் பொருள் பெற்றோர்க்குச் சேருமாம். இத்தகைய தொடர்களைப் பொருளாக எழுதுவதற்கு உண்மையில் குறளில் இடமிருக்கிறதா? வலிந்து எழுதியிருப்பதாகத் தோன்றவில்லையா? தம் என்பது, முதல் அடியில் பெற்றோரைக் குறிப்பதனால், இரண்டாவது அடியிலுள்ள தம் தம் என்பனவும் பெற்றோரைக் குறிக்க, வினை என்பது பெற்றோர் செய்யும் தொழிலைக் குறிப்பதாக நேர்முகமுறையில் பொருள் எழுதப்பட்டது எம்மால். தொழில் என்னும் பொருளில் வினை என்னும் சொல்லை எண்ணற்ற இடங்களில் எடுத்தாண்டுள்ளார் வள்ளுவராதலின், பெற்றோர் தாம் ஈட்டும் பொருளைத் தமதாக எண்ணாமல், தம் மக்களுடையதாக எண்ணி, அம்மக்களையே தம் பொருளாக எண்ணுவாரேயானால், அம்மக்களை நன்முறையில் பேணி வளர்த்து முன்னுக்குக் கொண்டுவர முடியுமல்லவா? இக்கருத்தே இக்குறளின் நோக்கம். 4. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை யளாவிய கடிழ். (பதவுரை) தம் மக்கள் - தம் பிள்ளைகள், சிறுகை - தம் சிறிய கைகளால், அளாவிய-பிசைந்து துழாவிய, கூழ் - உணவானது, அமிழ்தினும் - (சுவையில் மிக்க) அமிழ்தத்தைக் காட்டிலும், ஆற்ற வள்ளுவர் கண்ட மனையறம், 61