பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. குழலினிதி யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர். (பதவுரை) தம் மக்கள் - தம் பிள்ளைகளுடைய, மழலைச் சொல் - இனிமையான குதலை மொழிகளை, கேளாதவர் - கேட்காதவர்களே, குழல் இனிது-புல்லாங்குழலின் ஓசை இனிமையாய் இருக்கின்றது. யாழ் இனிது - யாழின் ஓசை இனிமையாய் இருக்கின்றது, என்ப - என்று சொல்லுவார்கள். இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : (மன உரை) குழலோசை இனிது, யாழோசை இனிது என்று சொல்லுவர் தம் மக்களது மழலைச் சொற்களைக் கேளாதவர்; கேட்டவர் சொல்லார். (பரி. உரை) குழலிசை இனிது, யாழிசை இனிது என்று சொல்லுவர், தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர். (தெளிவுரை) தங்களுக்குப் பிறந்த குழந்தையின் மழலைப் பேச்சைக் கேட்டு மகிழ்ந்தவர்கள், புல்லாங்குழல், யாழ் முதலிய இசைக்கருவிகளின் இசை இனிமை உடைத்து என்று இயம்ப மாட்டார்கள். தங்கள் குழந்தையின் கொஞ்சலைக் கேளாதவர்களே பிற இசைகளைப் புகழ்வார்கள். வள்ளுவர் இங்ங்னம் கூறியதன் கருத்து, குழந்தையின் கொஞ்சல் மிக மிக இனிது என்பதை வற்புறுத்துவதே! 7. தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல். (பதவுரை) தந்தை - ஒரு தகப்பன், மகற்கு - தன் மகனுக்கு, ஆற்றும் - செய்யவேண்டிய, நன்றி - உதவியாவது, அவையத்து - (கற்றார் நிறைந்த) அவையிலே (சபையிலே). முந்தி இருப்ப வள்ளுவர் கண்ட மனையறம் 65