பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்களின் பெற்றோர்களைவிட உலகம் அன்றும், இன்றும், என்றும் - மகிழ்ந்ததே, மகிழ்கின்றதே, மகிழுமே! இரட்டுற மொழிதல் (இரண்டு பொருள்படச் சொல்லுதல்) என்னும் இலக்கண விதிப்படி, இக்குறளுக்கு இன்னொரு பொருளும் இயம்பலாம். அஃதாவது, "பெற்றோராகிய தங்களின் அறிவைக் காட்டிலும் பிள்ளைகள் மிகக் அறிவுடையவராயிருப்பது உலகோர்க்கு உவகை யளிக்கும்" என்பதாம். புலியின் வயிற்றில் பூனை பிறத்தலாகாது. ஆனால், சிப்பியின் வயிற்றில் இப்பிடுமுத்து) பிறப்பது குறித்து உலகம் உவக்கின்றதன்றோ? வேறொரு பொருளும விளம்பலாம் இக்குறட்கு அஃதாவது, "உலகிலுள்ள எல்லாப் பெற்றோர்களுக்கும் தங்கள் தங்களைக் காட்டிலும், தங்கள் தங்கள் பிள்ளைகள் மிக்க அறிவுடையவராயிருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியளிக்கும்" என்பதாம் பெற்றோரினும்பிள்ளைகள் அறிவிற் பெரியவராய் விளங்குவதால் பெற்றோர்க்குப் புகழ்ச்சி பெருகுந்தானே - 9. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். - (பதவுரை) தன் மகனை - தன் பிள்ளையை, சான்றோன் என - கல்வி கேள்விகளால் நிறைந்தவன் என்று (அறிவுடையோர்) சொல்ல, கேட்டதாய் - (அப்புகழ்மொழிகளை, பொய்கூறாத அவ்வறிஞர் வாயின் மூலமாகக்) கேட்ட தாயானவள், ஈன்ற பொழுதின் - (அப்பிள்ளையைப்) பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் இப்போது, பெரிது - மிகவும், உவக்கும் - மகிழ்ச்சியடைவாள். இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : (மன உரை) தான் பெற்ற காலத்தினும் மிக மகிழும், தன் 68 பேரா. சுந்தர சண்முகனார்