பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகனைச் சான்றோன் என்று பிறர் சொல்லக் கேட்ட காலத்துத் தாய். (பரி உரை) தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும், தன் மகனைக் கல்வி கேள்விகளான் நிறைந்தான் என்று அறிவுடையோர் சொல்லக்கேட்டதாய், .... பெண்ணியல்பால் தானாக அறியாமையால் கேட்ட தாய் எனவும் கூறினார். தெளிவுரை)பத்துத் திங்கள் வருந்திச் சுமந்து நொந்து பெற்ற தாயின் பொறையுயிர்ப்புத் துன்பத்தைப் (பேறுகால வேதனையைப்) போக்கும் மருந்து குழந்தையின் குரலன்றோ? பிறந்த உடனே குழந்தை, "குவா, குவா" என்று குழறுவதைக் கேட்டதும், துன்பத்தில் தோய்ந்துள்ள தாய்க்குக் கட்டுக்கடங்காத களிப்பு மட்டற்ற மகிழ்ச்சி அம்மகிழ்ச்சியைக் காட்டிலும் தன் பிள்ளை கல்வியறிவில் தேர்ந்தவன் எனப் பிற பெரியோர் புகழ்வதைக் கேட்டபோது பெரிதும் மகிழ்வாள் தாய் என்பது கருத்து. (ஆராய்ச்சி உரை) பிள்ளைகளின் திறமையை அறியும் அறிவு பெண்கட்கு இல்லையாதலின், பிறர் கூறக் கேட்டே அறிய வேண்டும் என்னும் கருத்துப்பட வரைந்துள்ளார் பரிமேலழகர். தாமே அறியும் திறமை பெண்டிர்க்கு இருப்பினும், இல்லாவிடினும், "காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு" என்றபடிதம் சிறப்பில்லாத பிள்ளைகளையும் சிறப்புடையவர்களாகக் கருதுவது பெரும்பாலும் பெற்றோர்க்கு இயல்பாகலின், பிள்ளையின் புகழைப் பிறர்வாயால் கேட்டு மகிழ்வதே பெருமகிழ்வாகும் என்னும் கருத்துப்படப் பாடியுள்ளார் வள்ளுவர் என்பதைப் பரிமேலழகர் அறிந்திலர் போலும்! 10. மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல். (பதவுரை) மகன் - ஒரு பிள்ளை, தந்தைக்கு-(தன்னைப் பெற்றுக் கல்வியறிவு ஒழுக்கம் உடையவனாக ஆக்கிய தன்னுடைய) வள்ளுவர் கண்ட மனையறம் 69