பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என மற்றைய பால்களும் கொள்ளலாம் என்பதை ஒருமொழி ஒழிதன் இனம் கொளற்கு உரித்தே என்னும் நன்னூல் விதி உணர்த்து கின்றதன்றோ? அவ்விதிப்படியே ஈண்டும் மகன் என்றபோதெல்லாம் மகள் என்றும் கொள்ளலாமே! அதிகாரச் சுருக்கம் எல்லாப் பேற்றினும், நல்ல பிள்ளைப்பேறே சாலச் சீரிது, அப்பேறு பெற்றவர்க்கு எப்போதும் துன்பங்கள் அணுகா. மெய், வாய், கண், செவி என்னும் பொறிகட்கு மிக்க இன்பம் கிடைக்கும். இத்தகைய பிள்ளைகளைக் கல்வியறிவு ஒழுக்கங்களில் சிறந்தோராக்குதல் பெற்றோர்க்குக் கடமை. பெற்றோர்க்குப் பெரும்புகழ் உண்டாக்குதல் பிள்ளைகட்குக் கடமை. «» «» o •z• * * வள்ளுவர் கண்ட மனையறம் 71