உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

90 பக்கத்தில் கரைமீது நடந்திருக்கிறார். அங்கே களிமண் நிலமாக இருக்கிறது, அதுதான் வழுக்கிவிட்டது. விழுந்துவிட்டார்! மாணிக்கம் : பாவம்! விழுந்துவிட்டார்! விழாமல் இருந் திருக்கலாம்! ஏன் விழுந்தாரோ தெரியவில்லை! ஆசிரியர் : நீ சொல்லுவது சரிதான். விழாமல் இருந்திருந் தால் நல்லதுதான் விழாமல் இருந்திருக்க வேண்டு மென்றால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? உங்க ளுக்குச் சொல்லத் தெரியுமா? வேலன் : எனக்குச் சொல்லத் தெரியும் ஐயா. மாணிக்கம் : என்ன செய்திருக்க வேண்டும்; அவர் விழா மல் இருக்க? வேலன் : அவர் அங்கே போகாமல் இருந்திருக்க வேண்டும்! (ஆசிரியரும் மாணவரும் எல்லோரும் சிரிக்கிறார்கள்.) முருகேசன் : வேலன் சொல்லுவதைக் கேட்டதும் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது ஐயா! சொல்லட்டுமா? ஆசிரியர் : ஒ! நன்றாகச் சொல், குறட்பாக்கள்தான் படித்துக்கொண்டிருக்கிறோம். ஒரு கதையையும் தெரிந்துகொள்ளட்டும் எல்லோரும். முருகேசன் : ஒருத்தருக்கு நடக்கமுடியாமல் இரண்டு கால் களும் வலித்துக்கொண்டே இருந்ததாம். அவர் ஒரு மருத்துவரிடம் போய்த் தனக்குக் கால்கள் ஒரு மாத மாக வலியாய் இருப்பதால் நடக்கமுடியவில்லை என் றாராம். அதற்கு அந்த மருத்துவர், அப்படியென்றால் ஒரு வண்டி வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்றா ராம். அதுபோல இருக்கிறது. வேலன் சொன்ன பதில். (ஆசிரியரும் மாணவர்களும் ஓ'வென்று சிரித்துவிட் டார்கள்.)