உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

92 ஊற்றுக்கோல் அற்றே - ஊன்றுகோல் உதவுவது போல உதவியாக இருக்கும். (எழுதிவிட்டு மாணவர்கள் எழுதியதைப் படித்துக் கொண்டிருக்கின்றனர்.) மாணிக்கம் : இந்தக் குறட்பா எளிதாக விளங்குகிறது ஐயா! ஆசிரியர் : எல்லோருக்குமா அப்படி? மாணவர்கள் : (எல்லோரும்) ஆம்; ஆம்: ஐயா! ஆசிரியர் : ஊன்றுகோலைக் கையில் வைத்துக்கொண் டிருப்பதுபோல என்ன வேண்டும்? மாணிக்கம் : ஒழுக்கமுடைய பெரியவர்களுடைய சொற் களை எப்போதும் மனத்தில் வைத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆசிரியர் : மாணவர்களே! மாலை நேரம் முடிந்துவிட்ட தல்லவா? விளக்குகள் போட்டுக்கொண்டிருக்கிறார் கள்! இன்றைக்கு நாம் படித்த குறட்பாக்களை யெல் லாம் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுகிறீர்களா? மாணவர்கள் : (எல்லோரும்) இப்போதே எல்லாவற்றை யும் நன்கு சொல்லுவோம் ஐயா ! ஆசிரியர் : நீங்கள் எல்லோரும் கெட்டிக்காரர்கள்தான்! வாருங்கள் போகலாம் ! (எல்லோரும் பூங்காவை விட்டு வெளியே புறப்படு கிறார்கள்.) மாணிக்கம் : ஐயா! இந்த இடத்தில் எவ்வளவு அழகாக ஒளி விளக்குகள் காட்சிகள் அளிக்கின்றன! ஒரே இடத் தில் அழகாக விளக்குகளை அமைத்து அழகு செய்திருக் கிறார்கள்.