உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

II 2 உழவனும் நிலமும் போல தலைவனும் தலைவியும் வாழ்தல் வேண்டும். நாயகன் கட்டளைகளை அன்புடன் ஏற்றுப் பணிந்தாற்றும் பெரும் பண்பு இன்பம் பெய்யும் நல் வாழ்க்கை முறையாகும். கடமைகளைச் செய்வதை அடிமை யென்று கூறுதல் கண்கெட்ட குருடர் செயல் போன்றதாகும். மனைவாழ்க்கை நடத்தும் மாண்புகள் பெற்றிருத்தலே வாழ்க்கைத் துணைவிக்கு அரும் பெரும் சால்பாகும். வாழ்க் கைத் தலைவனை இழிசொல்லுக்கும் பிறர் இகழ்ந்துரைக் கவும் இடமேற்படுத்திவிடுபவளும் மனைவியே யாகின்றாள். பெண்மையினை நன்கு புரிந்துகொண்டு வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி முடிக்கிறேன். ஆட்சிமுறை என்பது பற்றித் தொடர்ந்து பேசுவோம்.