உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

I 13

வாழும் மக்கள் ஒழுங்கும் உரிமையும் கொண்டவர் களாக வாழ்ந்தின் புற்று வாழ்க்கையினை நடத்துதல் வேண் டும். பிறந்தார்கள்-இருந்தார்கள்-இறந்தார்கள் என்று சொல்லும்படியாகப் பிறவியினைக் கடத்தும் வாழ்க்கை யினை நடத்தும் மக்களைக் காணும்பொழுதும் நினைக்கும் பொழுதும் பெரிதும் வருந்துகின்றேன். மக்கள் கூட்டத்தில் உரிமை பறிபோகாமல் ஒழுங்கு முறைகளை வகுத்துத் தருவதே அரசியல் எனப்படும் ஆட்சி முறையாகும். அதனைப்பற்றியே பேசுகின்றேன். நாட்டின் ஆட்சியினை நினைக்கும்பொழுதே உங்கட்கு நல்ல ஒரு தலைவன் வேண்டும் என்ற எண்ணம் உண்டாதல் வேண்டும். அத்தலைவனை மன்னன்-அரசன்-வேந்தன் -இறைவன் என்றெல்லாம் அழைக்கலாம். எப்பெயர்கொண்டு அழைத்தாலும், அவனுக்கு இருக்க வேண்டிய பல்வேறு உயர்ந்த-தலைசிறந்த பண்புகள் இருக் கின்றனவா என்று நீங்கள் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். பண்புகள் என்பவை செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யும் ஆற்றலும், அறிவும் என்பதே யாகும். அவைகளெல்லாம் இல்லையேல் அவன் நாட்டுக்காவல னாக - மன்னனாக இருத்தற்கு உரியவனே அல்லாதவ னாகின்றான். பிறவியினாலேயே - பிறந்த உரிமையினா லேயே ஒருவன் வேந்தனாக வரமுடியும் என்ற கருத்தினை ஒரு சிறிதும் நம்பாதீர்கள், ஒப்புக்கொள்ளாதீர்கள் என்றே கூறுவேன். எந்த ஆட்சியினைப்பற்றிப் பேசப் புகுந்தாலும் ஆறு வகைப்பட்ட பகுதிகளை நீங்கள் நினைவில் இருத்தி வைத் துக்கொண்டுதான் பேசவேண்டும். - - அஃதாவது, (1) படைகள் (2) குடிமக்கள் (3) செல் வம் (4) அமைச்சர்கள் (5) துணையான நண்பர்கள் 8