உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

124 மடிமை குடிமைக்கண் தங்கின் தன் ஒன்னார்க்கு அடிமை புகுத் தி விடும். மடிமை - மடிமைக் குணம், குடிமைக்கண் - நற்குடியாளனிடம், தங்கின் - இருந்து விடுமேயானால், (அவனை) தன் - தன்னுடைய, ஒன்னார்க்கு - பகைவர்களுக்கு, அடிமை - அடிமையாக்கும் நிலைமையினை, புகுத் திவிடும் - உண்டாக்கிவிடும். ஒருவனை மற்றவன் அடிமைப்படுத்திவிடுகின்றான் என்றால் அதற்குச் சோம்பேறித்தனந்தான் இடங் கொடுக்கின்றதாம். இதனைப் பலர் ஊன்றி நினைத்துப் பார்த்துப் பழகுவதே இல்லை. தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் மடி என்கிற பொல்லாத பழக்கம் கெடுத்துவிடுவதாகின்றது. பிறர் பார்த்து ஏளனம் செய்து இழிவு பேசி இடித்துக் கூறும் நிலைமைக்கும் மடிமை என்கிற குணம் ஒருவனைக் கொண்டுவந்து விடுவதாகின்றது; சிந்தித்து அறிந்துணருங் கள் . ஊக்கம் இல்லாத இடத்தில்தான் மடிமைக்குணம் வளருகின்றது. ஊக்கம் உள்ளத்தில் மலர்ந்து வளர வளர மடி (சோம்பல்) என்கிற தீமை மறைவதாகின்றது. பய னுள்ள எண்ணமும், பேச்சும், செயலும் தோன்றிய நேரங் களைக் கணித்தல் வேண்டும். பத்துப் பழங்களில் எட்டுப் பழங்கள் அழுகிவிட்டால் எவ்வளவு கவலை ஏற்படும். அதுவேபோல பத்து மணி நேரத்தில் எட்டு மணி நேரம் பயனுள்ள எண்ணமும், பேச்சும், செயலும் இல்லாமல் போய்விட்டால் மனம் மாழ்கி வருந்தித் திருத்திக்கொள்ள முயலவேண்டும். இதனை ஒவ்வொருநாளும் கணக்கிட்டுப் பார்த்துப் பழகுவீர்களாக.