உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

13 *

தெய்வத்துள் - தெய்வங்களுடனே, (ஒன்றாக) வைக்கப்படும் - வைக்கப்படுவான். இந்த ஒரு குறட்பாவினை நன்கு சிந்தித்து அறிந்து கொள்ளுங்கள். இல்லறத்தினை மேற்கொண்டு வாழும் வாழ்க்கையே போதும். இவ்வுலக வாழ்க்கையில்தான் எல்லாமும் இருக்கின்றன. - இவ்வுலக வாழ்க்கையினைப் பற்றியே நினைவுகொண்டு வாழுங்கள் . மற்ற உலக - தெய்வச் சிறப்புகள் என்று கூறப்படுபவைகள் எல்லாம் இவ்வுலகில் ஒழுங்காக வாழும் வாழ்க்கைக்கு நிகரற்றதாகின்றது என்னும் உண்மையினை மனத்தில் நன்கு பதியவைத்துக்கொள்ளுங்கள். அறமான இல்லறத்தில் வாழக் கற்றுக்கொண்டுள்ள மக்கள் இல்லற மல்லாத வாழ்க்கைதான் சிறந்தது என்று பேசுவது ஏனோ தெரியவில்லை! அந்த வாழ்க்கையினில் யாது பலனடையப் போகிறார்கள்? இதனை அறியாத பேதை மக்கள் இல்லறத்தைவிட்டு மற்றபடி வாழ்க்கையினை நடத்தினால்தான் இறைவனை அடைய முடியும் என்று எண்ணுகின்ற எண்ணத்தினை அறவே மறந்துவிடச் செய்வீர்களாக, அதற்குத்தக்க சான் றாகக் குறளொன்றினைத் துணையாகக் கொள்ளுங்கள். அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றி போஒய்ப் பெறுவது எவன் - இல்வாழ்க்கை - இல்லற வாழ்க்கையினை, அறத்தாற்றில் - அறமான வழியில், ஆற்றின் - நடத்துவானேயானால், புறத்தாற்றில் - புறமான வேறு வழியில், போஒய்ப் பெறுவது - போய் அடைகின்ற பயன், எவன் - யாது இருக்கின்றது?