133
133
இந்த ஒரு குறட்பா நற்றுணையாக உங்கட்கு இருத்தல் வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். கேட்பதற்கு மட்டும் இனிமை என்று கண்டு வாழ்க்கையில் நடைமுறை யில் கொள்ளாதிருத்தல் அறியாமையும் மூடத்தனமுமே ஆகும் என்று கூறுவேன். சிந்திக்கச் சிந்திக்கப் பயனளித்தே திரும் என்பதனை மறவாதீர்கள். சொல்லுவது யாருக்கும் எளிதுதான்; சொல்லிய வண் ணமே செய்கையில், வாழ்க்கையில் பழகுதலே அறிவுடை யோருக்கு அறிகுறிகளாகும். உலகில் அடையக்கூடிய இன் பங்கள் அனைத்தும் இல்வாழ்க்கையிலேயே இருக்கின்றன. பேரின்ப உலகம் - தெய்வீக இடம் . அந்த உலக வாழ்வு என்றெல்லாம் பெருமைப்படுத்திப் பேசி அதற்கு வழிகாட்டு வதற்கு வேறுபல வாழ்க்கைகள் உண்டென்று கூறுவார்களே யானால், அதனை நம்பிவிடாதீர்கள். வாழ்கின்ற முறையில் இல்லறத்தை மேற்கொண்டு வாழ்வானேயானால், அடைய வேண்டிய இன்பங்கள் அனைத்தும் வந்துவிடும் என்பது உண்மையிலும் உண்மை யாகும். - இல்லற இன்பத்தில் நிலைத்து நின்று மனைவி மக்க ளுடன் இனிது வாழ்ந்து இன்பந் துய்த்து மன அமைதி பெற்று அசையாத-கலங்காத உள்ளம் பெற்று அவாவறுத்து இன்புற்று வாழ்தல் என்பது வாழ்க்கையில் அமைத்து வைக் கப்பட்ட வழிகள் என்பதைப் பின்பற்றுவீர்களாக. இல்லறத்திற்கு இன்றியமையாத பண்புகள் என்று கூறப்படுவனவெல்லாம் அன்பு - அறம் என்பவைகளே யாகும். இரு கண்கள் போன்ற இவ்விரு எண்ணங்களையும் மனத்தில் சிந்தித்துப் போற்றி வாழுங்கள். - கற்பனை நயம் முடிவுற்றது.