134
கூற்றுவன் யார்? இது ஒரு நகைச்சுவையான பகுதி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. உலக ஆசானாகிய நமது வள்ளுவனார் அரிய கருத்துக்களை எடுத்துரைக்கும் பொழுதெல்லாம் நயமும் சாந்தத்தில் தவழும் மென்மையான நகைச்சுவையும் ததும்பும்படி அமைகின்ற பான்மை நம்மையெல்லாம் அதிசயிக்க வைத்துவிடுகின்றது. வறுமை’, தரித்திரம்’ என்கிற பொருள் பற்றி விவரமாகப் பேசும் ஒரு இடத்தில் கூற்றுவன் பெயரைக் குறித்தழைக்கும் முறை வேடிக்கையாக அமைந்து கிடக் கிறது. வறுமையால் யாசித்தல் (பிச்சை யெடுத்தல்) எவ் வளவு துன்பச்செயல் என்பதை எவ்வளவு துணுக்கமாக ஆராய்ந்து சொல்லமுடியுமோ அத்தனையும் இரவு' (யாசித்தல்) என்ற ஒரு பகுதியில் மிகத்தெளிவாகக் கூறி விடுகிறார். யாசித்து வயிறு வளர்ப்பவன் படுகிற கொடுந்துன்பமும், அவன் மனம் தொந்து நொந்து படுகிற வேதனையும், இப் படிப்பட்டதுதான் என்று எண்ணிச் சொல்லமுடியாது என்றுதான் நாம் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. நெருப்பின் மீது படுத்தாலும் தூக்கம் வரலாம். ஆனால் இந்த தரித்திரம் என்பதின் மேல் படுத்தால் கண்ணைக்கூட மூடமுடியாது என்று ஆசிரியர் கூறும்பொழுது நமக்குக் கொடிய வேதனை உண்டாகத் தான் செய்கிறது. யாசித்தல் என்கிற இந்தப் பழக்கத்தை கிஞ்சித்தேனும் மனதில் எண்ணவேகூடாது என்பதை இரவு அச்சம்' (யாசிக்க அஞ்சுதல் வேண்டும்) என்ற பகுதியில் நல்ல முறை யில் கவர்ச்சியாக அமைத்துவிட்டார். இப்பொழுது நாம் எடுத்துக்கொள்ளுகிற யாசித்தல்' - என்கிற இப்பகுதியில், தரித்திரம் என்பதைப்பற்றி பேசுகிற ஆசிரியர், பிழைப்பதற்கே யாதொரு வழியும் இல்லாமலும்