உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

# 35

சுற்றத்தாரால் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையிலும் இருக்கும் ஒருவன் என்ன செய்யவேண்டும் என்பதற்கு ஒரு குறிப்பு காட்டுகிறார். அத்துடன் அவ்வாறு அவன் செய்யாமல் இருப்பானா கில் அவனை ஒரு யமனாகக் கற்பனை செய்து நகைச்சுவை யினை நயமாகத் தெரியும்படி அழகு செய்கின்றார். உடல் பலம் ஒடிந்து, முயற்சி செய்ய வழி யாதொன்றுமே இல்லா மல் சுற்றத்தாராலும் கைவிடப்பட்டவன் என்ன செய்ய வேண்டும்? யாசிக்க வேண்டுமா? அங்ங்னம் ஆசிரியர் புத்திமதி சொல்லுவாரா? - இரவு அச்சம்' என்ற ஒரு பகுதியில் உலகில் மகா கொடிய செய்கைகளுக்கெல்லாம் கொடுமையானது யாசித் தல் என்னும் செயல்தான் என்று அறிவுறுத்துகிற ஆசிரியர் உலகில் யாரையும் யாசித்துப் பிழைப்பாயாக’ என்று கூற ஒப்பமாட்டார் என்பது ஒரு ஆச்சரியம் அல்லவே. தமிழர் களின் பண்பும் அதற்கு உடன்பட்டதல்ல என்பதும் நமக்குத் தெரிந்ததுதான். அவ்வாறு இருக்க உடல் வளர்க்க யாதொரு மார்க் கமுமே யில்லாதவனைப் பார்த்து ஆசிரியர் நீ ஒரு துறவி யாக மாறிவிடு' என்று சொல்லுகிறார். ஒன்றுமே கிடைக்க வழியில்லாதபடியால், எல்லா ஆசைகளையும் ஒருங்கே விட் டொழித்தல் தான் ஏற்றவழி யென்று அறிவுறுத்துகிறார். 'துப்பு’? என்கிற சொல் உணவு” அல்லது அனுபவிக் கப்படும் பொருள் என்பதனைக் குறிக்கும். துப்புரவு இல்லார்’ (அனுபவிக்க ஒன்றுமே இல்லாதவர்கள்) என்ன செய்ய வேண்டும் என்பதை உரைக்கும் முறையில் குறட் பாவினை ஆரம்பிக்கின்றார். அவர்களுக்கு ஒரேவழி ஆசை களை முற்றிலும் விட்டுவிடுதலே யாகும். சரி நமக்குத்தான் ஒன்றுக்கும் வழியில்லையே’ என்று நினைத்த பிறகும், ஆசையென்பது அவன் மனதில் நுழைந்து