உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

144

  • பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று ஆசிரியர் கூறிய உரைகளையும் இங்கு சிந்தித்தே பார்த்தல்வேண்டும். ஒத்தினை (வேதத்தினை) ஒதும் பார்ப்பான் அதனாலேயே தான் உயர்ந்தவன் என்று எண்ணி மக்களோடு ஒத்துவாழும் நோக்கத்தை அறவே மறந்து, ஒழுக்கம் என்பதைப்பின்பற்றி நில்லாமல் இருந்து விடுதலும்கூடும் என்பதைக் கண்டிக் கும் முறையில் இக்கருத்தினை ஆசிரியர் ஒருவாறு குறிப்பாக கூறுகிறார் என்று கொள்ளுவதிலும் தவறு ஒன்றும் இல்லை.

கெடும்' (கெட்டு விட்டான்) என்கிற சொல்லினை இக்குறட்பாவில் கூறிய பொருத்தம் சிந்திக்கத்தக்கது. பார்ப்பான் என்கிற சொல்வினைப் பொதுப்பட நூல் களைப்படிக்கும் (பார்க்கும்) அனைவர்க்குமே வைக்கின் றார் என்றே கொள்ளுதல் வேண்டும். படிப்பவன் அல்லது கற்பவன் என்று கூறாது பார்ப் பான் (பார்ப்பவன்) என்று கூறியதால் வேதங்களை (ஒத்தினை) வாய்விட்டுப் படிக்கும் பழக்கத்தை விட்டு மனதிற்குள்ளேயே மனனம் செய்து கொண்டு, கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கும் மக்களையேதான் குறித்துப் பேசுகிறார் என்று சொல்லுவோர் கருத்துங்கூட மறுக்க முடியாதது. ஒன்றுதான். எப்படியிருந்தாலும் ஒழுக்கத்தின் சிறப்பினைக் கூற வந்த ஆசிரியர் ஒத்தினை (நூல்களை அல்லது வேதங்களை) ஒதிக்கொண்டு இருப்பவனைச் சுட்டிக்காட்டி அவன் அதனை மக்களுக்கு வேண்டிய ஒழுக்கத்திளைத்தான் தலை யாகக்கொள்ளவேண்டுமே யொழிய ஒதுதலைத்தான் தலை யானதென்று கொள்ளுதல் பொருந்தாது என்றும், அப்படிப் பட்ட நூல்களை (ஒத்தினை) மறந்தாலும் மறுமுறையும் நினைவுபடுத்திக்கொள்ளமுடியு மென்றும், ஆனால் ஒழுக்கம் கெட்டுவிட்டாலோ, அவன் கெட்டேவிட்டான் என்பதையும் தெள்ளத்தெளிய கூறிவிட்டார் என்க. இது தான் குறள்: