33
6
காலமறிந்து செய்க! 'அண்ணா! இந்தப் பக்கத்தில் ஆறு கிடையாதா? எனக்கு ஆற்றங்கரையில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்க ரொம்பவும் ஆசை அண்ணா!' - - நன்றாகக் கேட்டுவிட்டாய் தம்பி நம்முடைய கிராமத் திற்குப் பெருமையே ஆற்றினால்தான். பெரிய ஆறு ஓடிக் கொண்டிருக்கிறதே. அகலமான ஆறு அது. எப்போதும் நீர் ஓடிக்கொண்டே இருக்கும்; பல வகையான பறவைகள் எல்லாம் இருக்கும். கூட்டம் கூட்டமாகப் பறவைகள் வரும், போகும். கரையோரத்தில் இருந்து பார்த்தால் மீன்கள் ஒடிக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கும். இன்னும் எத்தனையோ காட்சிகளையெல்லாம் பார்க்க லாமே! படகுகள் கூட அந்த ஆற்றில் போகும்.” எங்கே அண்ணா அந்த ஆறு இருக்கிறது. என்ன அழைத்துப் போங்கள்!” அதிக தூரத்தில் இல்லை தம்பி! இந்த மலைக்கு அந்தப் பக்கத்தில்தான் அந்த ஆறு ஒடுகிறது. அதனால் தான் நமக்குத் தெரியவில்லை. இந்த மலை ஒரமாகவே போனால், அந்த ஆற்றங்கரைக்குப் போய்விடலாம். அதோ ஆட்கள் போகிறார்களே, அவர்கள் கூட ஆற்றுக்குத் தான் போகிறார்கள் போல் தெரிகிறது. வா, தம்பி! போக லாம்.” - வேகமாக நடங்கள் அண்ணா! சீக்கிரம் போய்ச் சேரு வோம்." - "ஒ என்னைவிட வேகமாக நடந்து போகிறாயே!” i 3