39
39
கொக்கு ஒக்ககூம்பும் பருவத்து மற்று அதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து. அண்ணா! இந்தக் குறட்பா மிகவும் நன்றாக இருக் கிறது. இதைப் பிரித்துத் தனித்தனியாக சொல்லுங்கள்.' தம்பி! எல்லா குறட்பாக்களும் நன்றாகத் தான் இருக் கும். ஒவ்வொன்றையும் சிந்தித்துச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆழ்ந்த பொருள் நன்றாகத் தெரியும். நீ கேட்டபடியே சொல்லுகிறேன். குறித்துக் கொள்.' "அப்படியே செய்கிறேன் அண்ணா!' 'கூம்பும் பருவத்து’ என்றால், காரியம் செய்து முடிப்ப தற்கு நல்ல காலம் வாராமல், சுருங்கிய காலமாக இருக்கும் போது.” "கொக்கு ஒக்க', கொக்கு அசையாமல் அமைதியாக இருப்பதுபோல் நாம் இருக்கவேண்டும். எழுதிக்கொண் டாயா தம்பி! விளங்குகிறதா?” எழுதிக்கொண்டேன், அண்ணா! நன்றாக விளங்கு கிறது. இன்னும் சொல்லுங்கள் எழுதிக்கொள்ளுகிறேன்.” 'காலம் ஒத்து வராத வரையில், கொக்கு போல் அமைதியாக இருக்க வேண்டும். காலம் வந்த பிறகு, அதா வது சீர்த்த இடத்து’ என்று குறட்பாவில் வருகிறதே அது தான் நல்ல நேரம் வந்தவுடன் என்பது அர்த்தம்.” அப்போது என்ன செய்யவேண்டும் தெரியுமா தம்பி!’ ஒ தெரியுமே அண்ணா! தாமதிக்கவே கூடாது. உடனே காரியத்தை விரைவாக முடித்துக் கொள்ள வேண்டும்.” х "நீயே விளக்கிவிட்டாயே! சிக்கிரம் முடித்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான்-குத்து ஒக்க-என்ற சொற்கள்