41
7
படிக்கப் படிக்க அறிவு வளரும் 'ஆற்றைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதண்ணா! ஏன் இந்த ஆறு நிறைய தண்ணிர் ஒடவில்லை?” அதுவா தம்பி! சில மாதங்களில்தான் ஆறு நிறைய தண்ணிர் ஒடிக்கொண்டிருக்கும். வெள்ளம் வருகிறது என்று சொல்லுவார்களே, அதுகூட அப்போதுதான்! இந்த மாத மெல்லாம் கொஞ்சமாகத்தான் தண்ணிர் ஒடும், ஆற்றின் ஒரங்களில் எப்போதும் ஒடிக்கொண்டிருக்கும். அதோ பார் அனேக இடங்கள் மணலாகவே தெரிகின்றன.” ஆம் அண்ணா! அங்கேயெல்லாம் இப்போது தண்ணீர் வராதுபோல் இருக்கின்றது. அங்கே ஆட்கள் கூட கும்பல் கும்பலாக உட்கார்ந்திருக்கிறார்களே!’ மாலை நேரம் வரப்போகிறதல்லவா தம்பி! அதனால் காற்று வாங்க பலர் இங்கே வருவார்கள். அங்கேதான் உன்னையும் அழைத்துக்கொண்டு போகிறேன்.” "அதோ பாருங்கள் அண்ணா! ஏதோ வேடிக்கை நடக் கிறது போல் தெரிகிறது. போய்ப் பார்த்து வரலாம் அண்ணா! பையன்கள் மண்ணைப் பறித்துக்கொண்டு விளையாடுகிறார்கள் போல் இருக்கின்றது.” ! அங்கே ஒன்றும் வேடிக்கை நடக்கவில்லை தம்பி1 விளையாட்டு நடக்கவில்லை. வேலையாகத் தான் மணலைத் தோண்டிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பக்கத்தில் என்ன வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகி றதா?