48
48 மாணவர்கள் : மழைத்துளி விழாவிட்டால்: ஆசிரியர் : எல்லாவற்றிற்கும் மழையேதான் காரணம். இந்த மழை வானத்திலிருந்து பெய்கின்றதல்லவா? வானத்தைத்தான் விசும்பு’ என்று கூறுவார்கள். விசும்பு என்றால் என்ன பொருள்? கோபாலன் : விசும்பு’ என்றால் வானம் என்று பொருள் ஐயா! ஆசிரியர் : இவ்வளவு அழகாகப் புல் முளைத்துச் சிறிதாக வும் பசுமையாகவும் இருப்பதைப் பார்க்க எவ்வளவு நன்றாக இருக்கின்றது பாருங்கள். மிகச்சிறிய புல்லும் மழையைத் தானே நம்பி இருக்கின்றது. இப்போது குறட்பாவைச் சொல்லுகின்றேன். குறித்துக்கொள் ளுங்கள். [மாணவர்கள் எழுதிக்கொள்ள ஆசிரியர் குறட்பா சொல்லுகின்றார்.1 விசும்பின் துளிவிழின் அல்லால் மற்று ஆங்கே பசும்புல் தலைகாண் பரிது. எழுதிக்கொண்டீர்களா? எங்கே! மணி, நீ எழுதிய தைப் படித்துக் காட்டு! மணி : (படிக்கின்றான்) விசும்பின் துளிவிழின் அல்லால் மற்று ஆங்கே பசும்புல் தலைகாண் பரிது.' ஆசிரியர் : எல்லோரும் எழுதிக்கொண்டீர்கள்! பொருள் சொல்லுகிறேன் எழுதிக்கொள்ளுங்கள். (குறட்பா வினைப் பொருள் பிரித்து ஆசிரியர் சொல்லுகிறார்.) விசும்பின் - வானத்திலிருந்து, துளி - மழைத்துளிகள், விழின் அல்லால் - வீழ்ந்தால் காணமுடியும் அல்லாமல், மற்று ஆங்கே - விழாமல் போய்விட்டால், பசும்புல் தலை - பசும்புல்லின் தலையையும்,